ஹாங்காங் குடியுரிமை: ஆஸ்திரேலியா பரிசீலனை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
மெல்போர்ன்: சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும், ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.சீன அரசு, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல்

மெல்போர்ன்: சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும், ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.latest tamil newsசீன அரசு, உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். அத்துடன், சீனாவுக்கு நாடு கடத்தவும் சட்டத்தில் இடமுள்ளதாக கூறப்படுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து, ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதன் முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது குறித்து அவர் கூறியதாவது:ஹாங்காங்கில் நடைபெறும் போராட்டம் கவலை அளிக்கிறது. பல வாரங்களுக்கு முன்பாகவே, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத் தால் பாதிக்கப்படுவோருக்கு, அடைக்கலம் வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கத் துவங்கி விட்டது. இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஹாங்காங்கில், பிரிட்டனைச் சேர்ந்த, 3௦ லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, குடியுரிமை வழங்கப்படும் என, பிரிட்டன் அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
03-ஜூலை-202009:38:49 IST Report Abuse
Balasubramanian Ramanathan சீனாவில் இருக்க வேண்டிய பெரும்பாலோனர் தமிழ் நாட்டில் குறிப்பாக மதுரை தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இருப்பது தெரிகிறது.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
03-ஜூலை-202007:53:32 IST Report Abuse
Nallavan Nallavan அதைவிட இந்தியா ஒரு நட்புநாடு என்கிற முறையில் நன்கு படித்து வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இந்தியர்களுக்கு உதவலாமே ????
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஜூலை-202016:13:18 IST Report Abuse
 Muruga Velகுழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கனம் காட்டினால் அடுத்த நாட்டை வேலை வாய்ப்புக்காக கெஞ்சாமல் இருக்கலாமே .....
Rate this:
Cancel
Pats - Coimbatore,இந்தியா
03-ஜூலை-202007:41:18 IST Report Abuse
Pats மேலும் பிரிட்டன் 10,000 கிமீ தள்ளியுள்ள, ஐரோப்பிய யூனியனில் இருந்து சமீபத்தில் பிரிந்துசென்ற (BREXIT) வடத்துருவப்பகுதி. எப்போதும் குளிர், பனி. பிரிட்டன் ஒரு சோம்பேறி நாடு. ஹங்காங்காரர்கள் பயங்கர சுறுசுறுப்பானவர்கள். ஒரு ஆயிரம்பேர்கூட பிரிட்டன் செல்வார்களா என்பதே கேள்விக்குறி. அதற்கு ஹாங்காங் சீனர்கள் அருகில் உள்ள ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கும் ஹாங்காங் சீனர்களிடம் உள்ள பணம்தான் குறி. பார்க்கலாம்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03-ஜூலை-202016:43:18 IST Report Abuse
Sanny Australia never expect money, only care human bean, even now Australia providing lots of money for those lost job and who recently came from Indian after few years those who had permanent residency and citizen of Australian , because they never get good hospitality in India .Please before commenting get the real fact and comment...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X