அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: புயல் ராமச்சந்திரன்| Heavy flooding in October, Southern and Central districts may be submerged: Puyal Ramachandran | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (21)
Share
சென்னை: ''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல் கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்கும். 'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு

சென்னை: ''இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. அருவி போல் கொட்டும் மழையில், தமிழகத்தின் தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்கும். 'மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொள்வது அவசியம்,'' என, பஞ்சாங்க அடிப்படையிலான வானிலை கணிப்பாளர், 'புயல்' ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.latest tamil news


ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும், இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும், வறட்சி எப்போது, எங்கே நிலவும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர், புயல் ராமச்சந்திரன் அறிக்கை வெளியிடுவார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பை, அவர் ஜனவரியில் வெளியிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.நிச்சயம் நடக்கும்இது குறித்து, அவர் அளித்த பேட்டி:நான் வேத விஞ்ஞானம் அடிப்படையில், வானிலை நிலவரத்தை வெளியிடுகிறேன். 1998ல் இந்த ஆராய்ச்சியை துவங்கியபோது, என் முதல் பேட்டி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.அப்போது முதல், என் ஆராய்ச்சி படிப்படியாக அதிகரித்து, புயல்களையும், வெள்ளத்தையும் சரியாக முன் கூட்டியே தெரிவித்து வருகிறேன்.

வானிலை மையத்தை பொறுத்தவரை, இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பர்.ஆனால், நான் இப்படித்தான் நடக்கும் என, உறுதியாக தெரிவிக்கிறேன். வேத விஞ்ஞானத் துறையை வளர்க்க, அரசு முயற்சித்தால், இன்னும், 10 ஆண்டுகளுக்கு கூட வானிலை நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியும். அதனால், முன் எச்சரிக்கை மற்றும் சரியான திட்டமிடல் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட குறைவாகவே பெய்யும். கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிராவில் முந்தைய ஆண்டுகளை விட, தென்மேற்கு பருவமழை குறையும். அக்டோபர் வரை காற்றுடன் கூடிய, சிறிய மழை நீடிக்கும்.


latest tamil news


வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டு மிகக் கடுமையாக இருக்கும். தமிழகத்தின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில், அருவி போல் மழை கொட்டும். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மதுராந்தகம் முதல் கன்னியாகுமரி வரை, இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள நேரும்.நின்று பெய்யக் கூடிய அளவுக்கு, காற்றழுத்த தாழ்வு பகுதி, மேல் அடுக்கு சுழற்சி ஏற்படும்; புயல்களும் உருவாகும். இவை அனைத்தும், பெரும் மழையை தரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் கட்டுக்கடங்காத வெள்ளம் உருவாகும்.எனவே, மத்திய - மாநில அரசுகள், இதை முன்கூட்டியே தெரிந்து, உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஏரி, குளங்களை, இப்போதே துார் வாரி வைத்து கொள்ள வேண்டும்.கடந்த, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் போன்று, இந்த முறை தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு வெள்ளம் ஏற்படும். சென்னையில் கல் குவாரிகளை இணைத்து நீரை சேமித்தது போல், இந்த மாவட்டங்களிலும், கூடுதல் நீர்த்தேக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயிர் மூழ்கி விடும் என்பதால், தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், நவம்பர், டிசம்பரில் விவசாய பணிகளை தவிர்த்து கொள்வது நல்லது.

அக்டோபருக்கு முன்பே, விவசாயத்தை முடித்து கொள்ள வேண்டும்.தானியம் சேமிப்புஅரசு தரப்பில் தானியங்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மழை வெள்ளத்தால், தானிய கிடங்குகள் சேதமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் அபாயம் கருதி, வணிகர்கள், பொதுமக்கள், தேவையான அளவுக்கு உணவு பொருள் கையிருப்பை, உறுதி செய்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரக்கூடிய பெரும் மழையை, நீராதாரமாக மாற்றி கொள்ளலாம். இல்லையென்றால் வெள்ளமும், அதனால் பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsஎப்போதெல்லாம் பாதிப்பு?'புயல்' ராமச்சந்திரன் கணித்துள்ளபடி, ஜூலை, 20க்குள் வங்க கடலில் புயல் உருவாகி, ஒடிசா கடற்பகுதியை கடக்கும்= ஆகஸ்டில் இருந்து, கடற்பகுதியில் வலுவான, 'எல் நினோ' சூழல் நிலவும். அதனால், புயல் மற்றும் சூறாவளி காற்று அதிக அளவில் ஏற்படும். இடி, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும்=அக்., 20 முதல், 31க்குள் மேக வெடிப்பால் கனமழை பெய்யும். இந்த மழை வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக பலனை தரும்=அக்., முதல் ஜனவரி இரண்டாம் வாரம் வரையில், அடைமழை கொட்டும்.

இடி, மின்னல் தாக்குதல், புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேல் அடுக்கு சுழற்சி ஆகியவற்றால், தொடர்ச்சியாக மழை பெய்யும். நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும்; இயல்பு வாழ்க்கை முடங்கும்=நவம்பரில், காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகம், ஆந்திரா, கேரளாவில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும்=டிசம்பரில், சூப்பர் புயல் உருவாகி, தொண்டி மற்றும் காரைக்கால் இடையே கடக்கும். இதனால், கடும் சேதம் ஏற்படும்=ஜனவரியில், வங்கக் கடலில் மற்றொரு புயல் உருவாகி, கோடியக்கரை மற்றும் கடலுார் இடையே கடக்கும். இந்த புயல், வெள்ளத்தை ஏற்படுத்தும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X