சாதாரண குடிமகனுக்கு ரூ.20 லட்சம்; பிரியங்காவுக்கு ரூ.37,400!

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement

புதுடில்லி: இதுவரை எம்.பி., எம்.எல்.ஏ., என எந்த பதவியும் வகிக்காத காங்., கட்சியை சேர்ந்த பிரியங்கா, டில்லியில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவுக்கு வெறும் ரூ.37,400 மட்டுமே மாத வாடகை அளித்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவே சாதாரண குடிமகன் எனில், இந்த பிரமாண்ட 'டைப் 6' பங்களாவுக்கு, ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியது இருந்திருக்கும்.



latest tamil news



பிரியங்காவுக்கு வழங்கப்பட்டு வந்த, சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு படையின் பரிந்துரைப்படி, 1997ல் பிரியங்காவுக்கு, டில்லியில், லோதி எஸ்டேட் பங்களா ஒதுக்கப்பட்டது. இந்த 'டைப் 6' வகை பங்களா, 2,765.18 சதுர மீட்டர் அளவுக்கு பரந்து விரிந்தது.


latest tamil news


கடந்த 2003ம் ஆண்டு ரூ.53,421 ஆக இருந்த இந்த பங்களாவின் வாடகையை, காங்., ஆட்சிக்கு வந்ததும், ரூ.8,888 ஆக குறைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.1,700 மட்டும் அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளாக காங்., தலைவர்களுக்கு அச்சுறுத்தல் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருந்த இந்த பங்களாவுக்கு, கடந்த மாதம் வரை பிரியங்கா, ரூ.37,400 மட்டுமே வாடகையாக செலுத்தி உள்ளார். இதுவே சாதாரண இந்திய குடிமகனாக இருந்திருந்தால், இந்த பங்களாவுக்கு, மாதம் ரூ.20 லட்சம் வரை வாடகையாக செலுத்தி இருக்க வேண்டும். பிரியங்கா எம்.பி., எம்.எல்.ஏ., என எந்த பதவியும் வகிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



லக்னோவில் குடியேறுகிறார்:


தற்போது, இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை ஆக.,1க்குள், பங்களாவை காலி செய்யுமாறும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தை செலுத்துமாறும், மத்திய உள்துறை அமைச்சகம், பிரியங்காவுக்கு, நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து உ.பி., தலைநகர் லக்னோவில் உள்ள, அவரது பாட்டி இந்திராவின், தாய் மாமா மனைவியான ஷீலா கவுல் வசித்த வீட்டிக்கு குடியேற உள்ளார். பங்களாவுக்கு செலுத்த வேண்டிய ரூ.3.26 லட்சத்தை ஆன்லைன் வழியாக பிரியங்கா செலுத்தி விட்டதாக காங்., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Layman - Chennai,இந்தியா
08-ஜூலை-202010:52:45 IST Report Abuse
Layman மிக கேவலமான குடும்பம் ...
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
07-ஜூலை-202013:12:38 IST Report Abuse
Amirthalingam Shanmugam ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டால் அதுவும் ........ பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்டுகொண்டிருந்தால் .எல்லாமே ...எல்லாமே ....தேடிவரும் ."ஹும்" .
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
06-ஜூலை-202016:06:11 IST Report Abuse
KUMAR. S இதுவரை அவர்களை விட்டது தவறு என்றாலும் ஒரு மாத வாடகை 20 லட்சம் இருக்கும் என்று ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X