பொது செய்தி

இந்தியா

தனியார் ரயில் சேவை 2023ல் துவக்கம்; நிறுவனங்கள் ஆர்வம்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: ''இந்தியாவில், தனியார் ரயில் போக்குவரத்து, வரும், 2023, ஏப்ரல் முதல் துவங்கும்,'' என, இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர், வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.latest tamil news


இந்திய ரயில்வே, தனியார் மூலம், 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று, இந்திய ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


latest tamil news


அப்போது அவர் கூறியதாவது: வரும், 2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம். 2,800 ரயில் சேவையில், 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும். தனியார்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, சேவையை மேற்கொள்ள வேண்டும். விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில், தனியார் ரயில் கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும்.

மேலும், ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பயன்படுத்த, தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தனியார் ரயில்கள் மூலம், குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில், மிகச் சிறப்பான சேவையை பயணியர் பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஆர்வம்:


இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள, பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை ஆர்வமாக உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூலை-202012:40:44 IST Report Abuse
ஆரூர் ரங் போக்குவரத்து விமான நிறுவனம் போன்றவற்றில் பல லட்சம் கோடி வரிப்பணத்தைக் கொட்டி நட்டத்தில் இயக்கம். ஆனால் கிராமங்களில் சாலை,மின்சாரம், குடிநீர், கல்வி போன்றவற்றுக்கு போதிய நிதியில்லாம்ல் அடித்தது நேரு காந்தி குடும்பத்தின் போலி சோசலிச ஆட்சி. அரசே வணிகம் செய்வது அபத்தம். அரசு போடும் சாலைகளில் தனியார் பஸ் போவதுபோல அரசின் தண்டவாளங்களில் தனியார் சொகுசு ரயில் ஒடி வருமானம் வருவது நல்லதுதான். சாதாரண பயணிகள் ரயில் மட்டும் அரசு( மானியத்தில்) நடத்தினால் போதும் அதனை விடுத்து கடமை தவறி வேண்டாத வணிகத்தில் ஈடுபடுவது மக்களுக்கு செய்யும் துரோகம். மும்பை மெட்ரோ ரயிலைக் கட்ட அனில் அம்பானிக்கு காண்டிராக்ட் கொடுத்த காங் திமுக இப்போ எதிரக்க கூடாது . சென்னை மெட்ரோ ரயிலை அரசா நடத்துது?
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
03-ஜூலை-202012:00:40 IST Report Abuse
தமிழ்வேள் தனியார் ரயில்கள் இயக்குவது தவறல்ல ..ஆனால் சிற்றூர்களுக்கு சேவை செய்யும் சிறு ரயில் நிலையங்களை மூடுவது பாசஞ்சர் ரயில்களை ரத்து செய்வது என்று நகரமயமாக்களுக்கு துணை போவது அதிவேக சொகுசு பயணிகளை மட்டும் முக்கியமாக கருதுவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் ..தற்போது பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டவுடன் பாசஞ்சர் ரயில்களில் கூட்டம் அதிகம் உள்ளது ..மேலும் சிற்றூர்களுக்கு தொடர்பு இன்னும் பெரும்பாலான இடங்களில் ரயில் மட்டுமே ...அவற்றையும் ரத்து செய்து கிராமங்களை தனிமைப்படுத்தவேண்டாம்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
03-ஜூலை-202011:54:11 IST Report Abuse
இந்தியன் kumar தனியார் பஸ் சேவை இருக்கும் பொது தனியார் ரயில் சேவை இருக்க கூடாதா என்ன ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X