பொது செய்தி

இந்தியா

டாக்டர், நர்சுகளுக்கு 'இண்டிகோ'வில் கட்டண சலுகை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போரில், முன்களத்தில் நின்று போராடும் டாக்டர் மற்றும் நர்சுகளை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு, 25 சதவீத கட்டண சலுகையை அளிக்க, 'இண்டிகோ' விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.



latest tamil news




தியாகம்:


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கும் மிகப் பெரிய சேவையில், நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் ஈடுபட்டு வருகின்றனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் இவர்களில் சிலருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர், தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் முன்கள வீரர்களாக செயல்படும் டாக்டர் மற்றும் நர்சுகளை கவுரவிக்கும் விதமாக, அவர்களுக்கு கட்டண சலுகையை, இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து, இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இண்டிகோவில் பயணம் செய்யும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு பயண கட்டணத்தில், 25 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.


latest tamil news



சலுகை திட்டம்:


இண்டிகோ நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்த சலுகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம்.விமான நிலையத்தில், 'செக் இன்' நடைமுறையின் போது, தாங்கள் பணியாற்றும் மருத்துவமனையின் அடையாள அட்டையை, அவர்கள் காண்பிக்க வேண்டும். இந்தாண்டு இறுதி வரை இந்த சலுகை திட்டம் அமலில் இருக்கும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஜூலை-202011:54:30 IST Report Abuse
rasheed இண்டிகோ நல்ல செய்தி 25/ இதனால் உங்களுக்கு பெருமை வாழ்த்துக்கள் கண்டிப்பா இதனால் பயன் அடைவர்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202007:54:22 IST Report Abuse
தல புராணம் இது ஒரு சீன முதலீடு விமான நிறுவனம். தனியார் விமானங்களில் அதற்கு முதலில் அனுமதி கொடுத்துள்ளார்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஜூலை-202007:52:45 IST Report Abuse
தல புராணம் சரியான கொள்ளை விமான நிறுவனம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X