பொது செய்தி

இந்தியா

கொரோனா மீட்பு வேகம் கூடுகிறது; 9 நாளில் 10 லட்சம் பேர் குணம்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
coronavirus global update, CoronaVirus, Mortality Rate, உலகம், கொரோனா, வைரஸ், மீட்பு, குணமடைந்தோர், விகிதம், அதிகரிப்பு, உயர்வு, சதவீதம், எண்ணிக்கை

புதுடில்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. கடைசி 9 நாளில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1 கோடியே 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், மறுபக்கம் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு மேல் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இது மக்களிடையே ஒருவித நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.


latest tamil news


உலகில் கொரோனா பாதித்தவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை நேற்று (ஜூலை 02) அறுபது லட்சத்தை தாண்டியது. நேற்றைய முடிவில் 1 கோடியே 8 லட்சத்து 39 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60,70,123 ஆக அதிகரித்துள்ளது. அதாவது குணமடைவோர் விகிதம் 56 சதவீதமானது. கொரோனா பாதிப்பில் முதல் பத்து லட்சம் பேர் குணமாக 98 நாளும், அடுத்த 10 லட்சத்தை எட்ட 21 நாளும் ஆனது. ஆனால், கடைசி 10 லட்சம் பேர் ஒன்பது நாளில் குணமடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


குணமடைவோர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுவதற்கு ஆன நாட்கள்:


தேதி - மீண்டவர்கள் எண்ணிக்கை - எத்தனை நாள்ஏப்.,29 - 10,08,764 - 98
மே 20 - 20,32,384 - 21
ஜூன் 2 - 30,23,882 - 13
ஜூன் 13 - 40,33,229 - 11
ஜூன் 23 - 50,36,723 - 10
ஜூலை 2 - 60,70,123 - 9

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
03-ஜூலை-202016:40:06 IST Report Abuse
sundarsvpr கொரோனா என்ற தொற்றின் வேர் முழுமையாய் துடைக்காமல் என்று கடல் தண்ணீர் வற்றுவது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X