டி.எஸ்.பி உட்பட 8 போலீசார் சுட்டுக்கொலை; உ.பியில் பயங்கரம்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் குற்றவாளிகளை தேடிச் சென்ற போலீசாரை நோக்கி சரமாரியாக மர்ம நபர்கள் சுட்டதில் டி.எஸ்.பி., 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் விகாஸ் துபே என்பவர் மீது ராகுல் திவாரி என்ற நபர் கொலை முயற்சி புகார் அளித்திருந்தார். அவரையும்
police dead, police, uttar pradesh, UP news, உபி, உத்தரபிரதேசம், ரவுடிகள், போலீசார், சுட்டுக்கொலை,

கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில் குற்றவாளிகளை தேடிச் சென்ற போலீசாரை நோக்கி சரமாரியாக மர்ம நபர்கள் சுட்டதில் டி.எஸ்.பி., 3 உதவி ஆய்வாளர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் விகாஸ் துபே என்பவர் மீது ராகுல் திவாரி என்ற நபர் கொலை முயற்சி புகார் அளித்திருந்தார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் தேடி சாபேபூர் காவல் நிலைய போலீசார் பிக்ரு என்ற கிராமத்திற்கு இன்று (ஜூலை 3) காலை சென்றனர். போலீஸ் குழு வருவதை அறிந்த குற்றவாளிகள் பொக்லைன் இயந்திரத்தை குறுக்கே நிறுத்தி வழியை தடை செய்துள்ளனர். பின்னர் கூரை மீதிருந்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.


உத்தர பிரதேசத்தில் ஒரு தாதாவை பிடிக்க வந்த போலீஸ் படையை ரவுடிகள் சுற்றி வளைத்து அட்டாக் செய்தனர். எந்திர துப்பாக்கிகளில் இருந்து பறந்து வந்த குண்டுகளால் துளைக்கப்பட்டு 8 போலீஸ்காரர்கள் பரிதாபமாக இறந்தனர்.

latest tamil newsஇதில் டி.எஸ்.பி., தேவேந்திர மிஸ்ரா, உதவி ஆய்வாளர்கள் மகேஷ் யாதவ், அனூப் குமார், பாபுலால், காவலர்கள் சுல்தான் சிங், ராகுல், ஜிதேந்திரா மற்றும் பாப்லூ ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அறிந்த மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., பிரசாந்த் குமார் சம்பவ இடத்திற்கு புறப்பட்டார். கான்பூர் எஸ்.பி., மற்றும் ஐ.ஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர்.


latest tamil news


கான்பூர் மாவட்ட 6 எல்லைகளையும் சீல் வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். லக்னோவிலிருந்து தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பணியின் போது இறந்த எட்டு காவலர்களுக்கும் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார் மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
03-ஜூலை-202019:38:10 IST Report Abuse
ராஜேஷ் இந்தமாதிரி ரௌடிகள் தமிழ்நாட்டில் காக்கி உடையில் இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை .பாவப்பட்டவர்கள் நாங்களே
Rate this:
Cancel
03-ஜூலை-202019:09:00 IST Report Abuse
ஸ்டாலின் :: இது தவறான விஷயம் இந்த UP தான் சிறந்த அரசு ஆயிற்றே அங்கு எல்லாம் இப்படி எல்லாம் நடக்காதே இந்தியாவில் சிறந்த மாநிலம் UP ஆயிற்றே அப்புறம்
Rate this:
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
03-ஜூலை-202017:06:33 IST Report Abuse
Thirumal Kumaresan இந்த விஷயத்தில் ஈடு படட எவனும் உயிர் வாழ தகுதி இல்லாதவன்,யோகிக்கு தெரிந்தால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X