அமெரிக்காவில் உச்சத்தில் பாதிப்பு; டிரம்ப் கருத்தால் மீண்டும் சர்ச்சை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரசால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 28.36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்; 1.31 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறிவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 56 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று

வாஷிங்டன்: கொரோனா வைரசால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை, 28.36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்; 1.31 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறிவருகிறது.latest tamil newsஇந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 56 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்படத் துவங்கிய நாள் முதல், ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் இதற்கு முன் ஏற்படவில்லை. பிரேசிலில் மட்டும்தான் இதற்கு முன், ஒரேநாளில் 50,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க் கிழமையும் 49,286 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நேற்று முன்தினம் 50 ஆயிரமும், நேற்று 56 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


'பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும்' என, அதிபர் டிரம்ப் கூறியதோடு, 'நாடு முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என, நான் நினைக்கவில்லை. ஏனெனில், நாட்டில் பல இடங்கள் உள்ளன. அங்கு, மக்கள் நீண்ட இடைவெளியில் தங்கி வருகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
latest tamil newsடிரம்ப்பின் இந்தக் கருத்தால் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியடைந்துள்ளனர். டிரம்ப்பின் கருத்தையும் செயல்பாடுகளையும் கடுமையாக எதிர்த்து வரும், அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் தொற்று நோய்த் துறை இயக்குநர், டாக்டர் ஆண்டனி பவுசி, 'வேகமாகப் பரவிவரும் வைரசைத் தடுக்க, நாடு தழுவிய அளவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தினசரி கண்டறியப்படும் பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தைக் கடக்கும். அதிகம் பாதிப்படைந்த பகுதிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் அனைத்து பகுதிகளிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார். இவரது கருத்தையும் ஆலோசனையையும் அனைவரும் ஏற்றுள்ளனர். இந்நிலையில், பவுசியை கிண்டல் செய்யும் வகையில், அதிபர் டிரம்ப், தான் எப்போதும் இருண்ட கறுப்பு முகக் கவசத்தை அணித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதை பல்வேறு தரப்பினரும், டுவிட்டரில் கடுமையாக எதிர்த்தும் கிண்டலடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
03-ஜூலை-202014:42:22 IST Report Abuse
Vijay D Ratnam இதுவரை கொவிட் 19 தொற்றுக்கான மருந்து கண்டுபிடித்ததாக தெரியவில்லை. சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட உலகம் முழுக்க உள்ள மக்களை தொட்டுப்பார்த்துவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருந்தவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தவர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி மிகக்குறைவாக இருப்பவர்கள், ஏற்கெனெவே நுரையீரல் பிரச்சினை போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் வயதானவர்கள் மிகச்சிலர் உயிரிழந்து இருக்கிறார்கள். நீங்க என்னத்த மாஸ்க் போட்டு சோப்பு போட்டு கைகழுவிகிட்டு இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் தொற்று உறுதி. சமூக இடைவெளி பற்றி பேசுகிறோம், பார்ன் வித் சில்வர் ஸ்பூன், பிரிட்டிஷ் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தாள சாதாரண மக்கள் நெருங்கமுடியுமா. ஒரு நாட்டின் பிரதமர், ஜனாதிபதியே அவரை பார்க்க அவ்வளவு ஃபார்மாலிட்டிஸ் உள்ளது. அதுவே வீடில்லாமல் பிளாட்ஃபார்மில், கொசுக்கடிக்கு மத்தியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களை கொரோனாவால் தொட்டுக்கூட பார்க்கமுடியவில்லை. மாஸ்க் போட்டுக்கிட்டு வேலையை பார்க்கணும். எவ்ளோ நாட்களுக்கு வீட்டுக்குள் இருப்பது.கோடிக்கணக்கான வைரஸ்களுடன் இந்த கொரோனா வைரஸும் மனிதர்களுக்கு செட்டாகிவிடும். 135 கோடி இந்திய மக்களை செக் செய்தால் 40 கோடி பேருக்கு இருக்கலாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
04-ஜூலை-202006:10:20 IST Report Abuse
 Muruga Vel135 கோடி இந்திய மக்களை செக் செய்தால் 40 கோடி பேருக்கு இருக்கலாம் ... neenga check pannalaame .....
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
03-ஜூலை-202012:57:29 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI டாஸ்மாக் மூடிவிட்டு கோவில்களை திறங்க கொரோன என்ன எல்லாமே ஓடி விடும்
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
03-ஜூலை-202011:49:52 IST Report Abuse
sundarsvpr வீட்டில் முடங்கி கிடந்தால் மனஅழுத்தம் சிந்தனை தறிகெட்டு ஓடும். வாரம் ஒருநாள் மட்டும் காலையில் குடும்பத்துடன் முக கவசம் அணிந்து இடைவெளி அணுகி வெளியில் திருக்கோயில் பூங்கா நூல்நிலையம் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு சென்று இரவில் திரும்பலாம். முக கவசம் இடைவெளி மிகவும் முக்கியம். தேவையான உணவு நீர் கொண்டுசெல்லவேண்டும். மாலையில் வீடு திரும்பலாம் இது மன கட்டுப்பாடு பயிற்சி. இதுதான் நாட்டிற்கு நாம் செய்திடும் நன்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X