பொது செய்தி

தமிழ்நாடு

வளர்பிறை பிரதோஷத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

Added : ஜூலை 03, 2020
Share
Advertisement

தர்மபுரி: வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல், கிராமப்புறங்களில் உள்ள கோவில்களை திறந்து, வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்தது. இதனால், மூன்று மாதங்களாக பூட்டப்பட்டிருந்த கிராம கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வளர்பிறை பிரதோஷமான நேற்று, தர்மபுரி நகரில் உள்ள சிவன் கோவில்களில், பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டும் செய்யப்பட்டன. தர்மபுரி நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் மற்றும் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், இக்கோவில் மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கோரி ஆதிசக்திசிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X