பொது செய்தி

இந்தியா

லடாக் சென்றார் பிரதமர் மோடி: வீரர்களுடன் ஆலோசனை

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (72)
Share
Advertisement
லடாக், பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள், ஆய்வு, ஆலோசனை, PM Modi, india, china, border clash, Ladakh, LAC, india-china border, face-off

லடாக்: லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று(ஜூலை 3) லே பகுதிக்கு சென்று, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.


latest tamil news


லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் நிலவுகிறது.. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது. அங்கு, ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். லடாக் சென்ற பிரதமர் மோடியுடன், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.


latest tamil news


தொடர்ந்து, சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திக்சே பகுதி செல்லும் பிரதமர் அங்கு வீரர்கள் மத்தியில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



latest tamil news




லடாக் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் இன்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி லடாக் சென்றுள்ளார்.



கடந்த சில நாட்களுக்கு முன்னர், லடாக் வந்த ராணுவ தளபதி நரவானே, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ததுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீரர்களையும் சந்தித்து பேசினார்.


சீனா கருத்து

இதற்கிடையே, மோடியின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து தெரிவித்துள்ளது. ‛‛எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம். இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது'' என்று அந்நாடு கூறியுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
03-ஜூலை-202019:34:24 IST Report Abuse
அறவோன் "வாயினால் சுட்டவடை சுவைக்கும் சுவைக்காதே எழுபதுவருடம் உண்ட அமிர்தம்"
Rate this:
Cancel
03-ஜூலை-202018:17:58 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா அதிவிரைவில் சீன நரியின் வால் ஒட்டவே நறுக்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஜூலை-202017:51:13 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியினால் இந்தியாவுக்கு பெருமை. வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X