ஆக.,15 முதல் கொரோனா தடுப்பு மருந்து: ஐசிஎம்ஆர்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (7)
Advertisement
புதுடில்லி: கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்தும் இன்றளவும் கண்டறியப்படவில்லை.
ICMR, Corona Vaccine, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus vaccine india, corona drug, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, vaccine, Bharat Biotech, ஐசிஎம்ஆர், கொரோனா, மருந்து, ஆகஸ்ட்15, பாரத்பயோடெக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிப்பிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்தும் இன்றளவும் கண்டறியப்படவில்லை. உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து, ‛கோவேக்சின்' என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியின், இரண்டாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதலை பெற்றது.


latest tamil news
ஆக.,15 முதல்..


இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து சோதனையை துரிதப்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஐ.சி.எம்.ஆர்., கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 7 ம் தேதி முதல் மனிதர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதாக ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். மேலும், சோதனை வெற்றி அடைந்தால் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், ஆகஸ்ட் 15ம் தேதி தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுவே கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


இதற்கிடையே ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் காடிலா நிறுவனமும் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது. முதல்கட்டமாக விலங்குகளிடம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக மனிதர்களிடம் சோதித்து பார்க்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். மனிதர்களிடம் நடத்தப்படும் முதல் கட்ட பரிசோதனையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம், குறிப்பிட அளவிலான டோசுகளுடன் நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் பக்கவிளைவுகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட சோதனை சற்று அதிக எண்ணிக்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-202005:39:30 IST Report Abuse
joy சமிப ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாரத் பய்யோடெக் Chairman & MD Dr Krisna Ella தங்கள் நிறுவன தடுப்பு மருந்து இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ம‌ட்டுமே கூறினார், பி்ன்னர் ICMR எப்படி ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று தகவல் தருகின்றது என்பது புரியாத புதிராக உள்ளது
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜூலை-202021:09:34 IST Report Abuse
S. Narayanan பாராட்டுக்கள். சீக்கிரம் கொடுங்கள்.
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஜூலை-202019:19:29 IST Report Abuse
Tamilnesan இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த திருத்தணியில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த மருத்துவர் என்பது கூடுதல் தகவல். தமிழன்டா ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X