வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்திற்கு 5.39 லட்சம் பிபிஇ.,க்கள்,9.81 லட்சம் என்95 மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியுள்ளதாவது: கடந்த ஏப்., 1 முதல் 2.02 கோடி என்95 மாஸ்க்குகள், 1.18 கோடி தனிநபர் பாதுகாப்பு கவசம்( பிபிஇ) ஆகியவை, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், 6.12 கோடி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை, மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதில், டில்லிக்கு, 7.81 பிபிஇ.,க்கள், 12.76 லட்சம் என்95 மாஸ்க்குகளும், மஹாராஷ்டிராவிற்கு 11.78 லட்சம் பிபிஇ,க்கள். 20.64 லட்சம் என்95 மாஸ்க்குகளும், தமிழகத்திற்கு 5.39 பிபிஇ.,க்கள், 9.81 லட்சம் என்95 மாஸ்க்குகளை சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE