பொது செய்தி

இந்தியா

கோவாவுக்கு டூர் போகலாம்; உள்நாட்டு பயணிகளுக்கு அனுமதி

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Goa, Reopens, Domestic Tourists, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, No Quarantine, Arrival, Guidelines, கோவா, சுற்றுலா, தொடக்கம், உள்நாட்டு சுற்றுலா, தனிமைப்படுத்தல்

பனாஜி: சுற்றுலா பயணிகளின் மூலமான வருவாயை பெரும்பாலும் நம்பியிருக்கும் கோவா, கொரோனா வைரசுக்கு மத்தியில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு இன்று (ஜூலை 3) முதல் அனுமதி அளித்துள்ளது.

கோவாவில் நேற்று புதிய உச்சமாக 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கியுள்ளது. இதற்கிடையே கோவா மாநில அரசு இன்று (ஜூன் 3) முதல் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தவர்கள், அந்த சான்றுடன் கோவாவுக்கு வருகை தரலாம். அவர்களை தனிமைப்படுத்த மாட்டோம் என அரசு கூறியுள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக 250 ஹோட்டல்கள் செயல்பட தொடங்கியுள்ளன.


latest tamil news


இது தொடர்பாக பயணத்திற்கு முன், சுற்றுலாவின் போது மற்றும் வருகையின் போது என மூன்று நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. ஹோட்டல்களை முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும். அப்போது சுய விவரப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருந்தால் தனிமைப்படுத்தல் தேவையில்லை.


latest tamil news


வருகை தரும் அனைத்து பயணிகளும் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல் வருபவர்களின் மாதிரிகள் எல்லையில் பரிசோதிக்கப்படும். முடிவு வரும் வரை ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஓரிரு நாளில் முடிவு பெறப்பட்டு, நெகடிவ் என்றால் கோவாவில் தங்கலாம், இல்லை என்றால் தனிமை முகாமிற்கு அனுப்பப்படுவீர்கள் என அரசு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜூலை-202021:05:17 IST Report Abuse
S. Narayanan கொரோனாவினால் துவண்டு இருக்கும் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். ஆனால் பணத்திற்கு எங்கே போவது.
Rate this:
Cancel
03-ஜூலை-202020:10:09 IST Report Abuse
rasheed கோவா வாழ்க்கை ஒரு முறை பார்க்க வேண்டிய சுற்றுலா தளம் வசதி வந்தால் போகணும் ரஷீத்
Rate this:
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
03-ஜூலை-202017:17:01 IST Report Abuse
Arun Kumar இப்படி எல்லாத்தையும் திறந்து விட்டுடுறங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X