பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் இலவசம்

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ரேசன் கடை, இலவசம், முதல்வர், முதல்வர் இபிஎஸ், TN CM, Tamil Nadu, chief minister, palanisamy, eps, ration items, free ration, ration cardholders, pulse, sugar, cooking oil, rice, coronavirus, corona, covid-19, coronavirus outbreak, corona update, corona news, corona in TN

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில், வரும் ஜூலை மாதத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான டோக்கனை வீடுகளிலேயே வழங்கப்படும்

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேசன்கார்டுதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உடன், ரேசன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil newsநோய் தொற்று ஏற்படாதவண்ணம் மேற்படி, அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் செல்ல வேண்டும் என்பதால், வரும் ஜூலை 6 முதல் 9 வரை ரேசன்கார்டுதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது ரேசன் விலை கடைகளுக்கு 10ம் தேதி முதல் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். பொது மக்கள் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை இலவச பொருட்களை பெற்று கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜூலை-202021:02:32 IST Report Abuse
S. Narayanan பாதி மக்கள் ஊரில் இல்லாததால் அவர்கள் பொருள்கள் வாங்குவது இல்லை. அவர்களுக்கு பொருள்கள் வழகிவிட்டதாக மெசேஜ் அனுப்புகிறார்கள். பொருள் வாங்குவோருக்கு அரசு சொல்லும் அளவை விட குறைவான பொருட்களையே கொடுக்கிறார்கள். எல்லாம் எங்கே போகிறது என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
03-ஜூலை-202020:10:06 IST Report Abuse
SUBRAMANIAN P டாய் , என்னங்கடா.... நிர்வாகம் இது.... பணம் கொடுத்தாதான் பொருள்னு சொல்லி பணத்தை வாங்கி போட்டுட்டு இப்ப சொல்றீங்க.... நான் கூட பணம் கொடுத்துதான் பொருள்வாங்கினேன்... திருப்பித்தருவீங்களா... இல்ல...மொங்கானா...
Rate this:
Cancel
03-ஜூலை-202020:08:19 IST Report Abuse
rasheed ஏழை அனைவரும் நல்ல செய்தி நிம்மதியா இருக்கு இல்ல டவர் நினைத்து கஷ்ட பட தேவை இல்லை தமிழக அரசு முடிவூ வாழ்த்துக்கள் வணக்கம் பயன் பெறுபவர் பார்த்து பெருமை இருக்கு என்னடோ ரேஷன் கார்டு ஏழைக்கு கொடுத்து பயன் பெற வேண்டும் ரஷீத்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X