சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை; இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

வாஷிங்டன்: உலக வரலாற்றில் 2020ம் ஆண்டுக்கு தனித்த இடமுண்டு. குறிப்பாக, கொரோனா வைரஸ், பாலைவன வெட்டுக் கிளிகள் படையெடுப்பு என, இந்தாண்டின் ஒவ்வொன்றும் நிகழ்வும் அதிர்ச்சி தரும் சம்பவங்களாகவே உள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது ஒரு வீடியோவும் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் மைர்டில் கடற்கரை ஓரத்தில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனையே கவ்விச் செல்வது வீடியோவாக படமெடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களால், கடந்த இரு நாட்களாக, உண்மையிலேயே சுறா மீனைத் தூக்கிச் செல்லும் அளவுக்கு உலகில் ஒரு பறவை இருக்கிறதா என, விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.latest tamil news


இந்த வீடியோவை, கெல்லி புர்பாஜ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர், 'கழுகா... பருந்தா... மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தச் செல்லும் பறவை எது' என்ற கேள்விகளுடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வரை, 16.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து, கருத்திட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
latest tamil news
டிராக்கிங் சார்க்ஸ் (Tracking Sharks) எனும் டுவிட்டர் கணக்கும், இந்த வீடியோவைப் பகிர்ந்து, 'சுறா மீனை கவ்விச் செல்லும் இந்த பறவையின் பெயர் என்னவென்பது யாருக்காவது தெரியுமா?' எனக் கேள்வி கேட்டுள்ளது. அதற்கு சிலர், 'இயற்கை விந்தை' எனப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். சிலரோ, மீன்களைச் சாப்பிட்டு உயிர் வாழும் 'ஓஸ்ப்ரே' (Osprey) என்னும் பறவை தான் இது எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
09-ஜூலை-202006:51:59 IST Report Abuse
தல புராணம் ஏழு முதல் எட்டு அடி வரை இறக்கை விரிப்புடன் (wingspan) கூரிய நகங்கள் உள்ள கால்களால், தங்களின் உடல் எடையை விட சற்று அதிகமாக உள்ள இரையை வெகுதூரத்திற்கு பிடித்து செல்லும் அளவுக்கு பருந்துகள் உள்ளன. செய்தியில் உள்ள மெர்ட்டில் கடற்கரை நகர், தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது.. தெற்கு கலிபோர்னியாவில் அமெரிக்க தேசியப்பறவையான "வழுக்கை" கழுகுகள் (Bald Eagle) அதிகமாக உள்ளன. இவைகளின் இறக்கை விரிவு ஏ அடிக்கு மேல். எளிதாக 7 கிலோ எடையை தூக்கி செல்ல முடியும். மேற்கண்ட செய்தியில் உள்ள மீன் சுறா இல்லை ஆனால் லேடி மீன் (Lady Fish), (கர்நாடகாவில் கானே என்றும், கோவாவில் நவ்கிலி என்றும் )அழைக்கப்படும் மீனாக இருக்கும் என்று சொல்லலாம். இவ்வகை மீன்கள் கிட்டத்தட்ட 4-7 கிலோ எடையிருக்கும். மீனின் வாலைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது என்று விஷயம் அறிந்தோர் சொல்லியுள்ளார்கள்.
Rate this:
Cancel
VIJAYAN S - மாங்காடு,இந்தியா
07-ஜூலை-202008:13:42 IST Report Abuse
VIJAYAN S விடுப்பா.... விடுப்பா... தனுஷ் எல்லாம் பெரிய பெரிய ரவுடிகளை போட்டு அடிக்கிறப்போ இது நடக்காதா?????
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-ஜூலை-202007:19:40 IST Report Abuse
வெகுளி தயிர்வடை தாத்தா தமிழின தலைவர் என்று சொன்னதையே நம்பிய நாங்கள் இதை நம்ப மாட்டோமா?....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X