பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி.,யை கைது செய்யாதது ஏன்?

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement

சேலம்; சேலத்தில் வாகன தணிக்கையின் போது எஸ்.எஸ்.ஐ.,யுடன் தகராறில் ஈடுபட்டு, எட்டி உதைத்த, 'மாஜி' எம்.பி., அர்ஜூனன் மீது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட மூன்று பிரிவுகளில்,கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.latest tamil news
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மானத்தாள்நல்லகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுனன், 77. இவர் கடந்த 1967 முதல் 78 வரை ஆத்தூர் சரகத்தில் எஸ்.ஐ.,ஆகவும், 78 முதல் 79 வரை துணை இன்ஸ்பெக்டராகவும் ஆத்தூர் பகுதியில் பணியாற்றினார்.


பின்னர் போலீசில் விருப்ப ஓய்வு பெற்ற அவர் தி.மு.க.,வில் இணைந்து 1980 ல் நடந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரியில் தி.மு.க.,,சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் அ.தி.மு.க.,வில் இணைந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டாக உடைந்த போது ஜெ., அணி சார்பில் 1989 சட்டசபை தேர்தலில் சேவல் சின்னத்தில் தாரமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 1991 முதல் 95 வரை வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். தி.மு.க., தே.மு.தி.க., என பல கட்சிகள் அணிகள் மாறிய அர்ஜூன் தற்போது அ.தி.மு.க., உறுப்பினர் பதவியில் மட்டும் தொடர்கிறார்.


latest tamil newsஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தன் டவரே காாில் ஓமலூரில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே வந்த போது வாகன தணிக்கையில் சேலம் மாநகர போலீசின் சிறுவர் சீர்திருத்த பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜா, இரும்பாலை எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் , ஏட்டு ராஜ்குமார், பட்டாலியன் போலீஸ் தேசிங், போலீசார் ரமேஷ், மதிவாணன், ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

மாஜி எம்.பி. அர்ஜூனன் காரை போலீசார் தேசிங் நிறுத்தி உள்ளார். அப்போது அர்ஜூனனிடம் இ-பாஸ் கேட்டுள்ளார். அதற்கு அவர் 'நான்யார் தெரியுமா? மாஜி எம்.பி.,' என தெரிவித்து உள்ளார். 'அப்படியெனில் அடையாள அட்டையை காட்டுங்கள் ' என போலீஸ்காரர் கூற டென்ஷன் ஆன அர்ஜூனன்,'யாரிடம் அடையாள அட்டை கேட்கிறீர்கள்' என கூறி போலீசாரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய துவங்கினார்.

இதையடுத்து அங்கு வந்தை மற்ற போலீசார் இரும்பாலை போலீஸ் எஸ். எஸ்.ஐ., ரமேஷ் ஆகியோரிடம், அர்ஜூனன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அர்ஜூனன்,'சாத்தான்குளத்தை போல் இங்கும் கொலையில் ஈடுபடுகிறீர்களா' என கூறி ஆபாச வார்த்தையால் அர்ச்சித்தார். தொடர்ந்து எஸ். எஸ்.ஐ., ரமேஷை தள்ளினார்.

இதையடுத்து அவரும் தள்ளவே வேட்டியை மடித்து கட்டியபடி அர்ஜூனன் எஸ்.எஸ்.ஐ.,யை நெஞ்சில் எட்டி உதைத்து தள்ள முயற்சித்த நிலையில் சக போலீசார் அங்கு பணியில் இருந்த சுகாதாரத்துறை ,சுங்கச்சாவடி ஊழியர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அர்ஜூனன்ன கிளம்பி சென்றார். அவர் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மாஜி எம்.பி., அர்ஜூனன் போலீசாரிடம் நடத்திய சண்டை காட்சிகளின் வீடியோ 'வாட்ஸ் அப், பேஸ்புக்'கில் தமிழகம் முழுவதும் வைரலானது.

இது குறித்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி இரும்பாலை போலீஸ் எஸ். எஸ். ஐ., ரமேஷ் அளித்த புகாரின் படி மாஜி எம்.பி., அர்ஜூனன் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதலில் ஈடுபடுதல், ஆகிய பிரிவுகளில் கருப்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கைது இல்லைமா.ஜி., எம்.பி., அர்ஜூனன் மீது எஸ்.எஸ்.ஐ., ரமேஷ் அளித்த புகாரின் படி மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யவில்லை. சாதாரண குடிமகன் இந்த செயலை செய்திருந்தால் போலீசார் இந்நேரம் அவரை கைது செய்து இருப்பர். ஆனால் அ.தி.மு.க., வை சேர்ந்தவர் என்பதோடு வயதை காரணம் காட்டி போலீசார் அவரை கைது செய்யவில்லை.


போலீசார் சிலர், அர்ஜூனனின் அத்துமீறல் வீடியோ காட்சிகளை பத்திரிக்கையாளர்கள், டி.ஜி.பி., திரிபாதி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பினர். அந்த வீடியோ சமூக வளை தளங்களிலும் வைரலானது. மேலும் சென்னையில் இருந்து உயரதிகாரிகள் சேலம் உயர் அதிகாரிகளை கேள்வி கேட்க துவங்கியதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு மட்டும் செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
05-ஜூலை-202010:11:05 IST Report Abuse
பெரிய ராசு தைரியம் இருந்தா அண்ணனை கை தொடர பார்ப்போம்
Rate this:
Cancel
Rajesh - Delhi,இந்தியா
04-ஜூலை-202002:00:40 IST Report Abuse
Rajesh நெஞ்சில் தயிரியம் இருந்தால் கைது செய்திருப்பார்கள் ......
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
04-ஜூலை-202001:59:24 IST Report Abuse
Baskar இவன் மூஞ்சியை பார்த்தாலே தெரியவில்லையா. மக ரவுடி என்று. இருவர் மரணத்திற்கு காரணம் இன்னும் தெரியாத நேரத்தில் இது போன்ற செயல்கள் நடந்தால் மன்னிக்க கூடாது. இவனை அந்த இன்ஸ்பெக்டர் அங்கேயே போட்டு வெளுத்து இருக்கணும். அதர்க்கு எல்லாம் விக்கிரமன் வரமாட்டான். இனிமேல் எவனாவது போலீஸ் மேல் காய் வையுங்கள் எவனாவது எப்படியாவது போட்டு தள்ளுவான். டி.ஜி பி சரியில்லை என்பதே காரணம். டி.ஜி.பி மேலே ஒருத்தன் காய் வைத்தால் சும்மா இருப்பாரா போலீஸ் ஒன்றும் அடிமைகள் கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X