பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிப்பு

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

புதுடில்லி: சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலானது. இதையடுத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.



latest tamil news



இதையடுத்து ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு படிப்படியாக தளர்த்தியது. முதலில் உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதே நேரம் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஜூலை 15ம் தேி வரை தடை நீட்டிக்கப்பட்டது.


latest tamil news



தற்போது இந்த தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக ரீதியில் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானத்தை இயக்கவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கவும் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இத்தடை சரக்கு விமானங்களுக்கும், விமானப் போக்குவரத்து இயக்ககம் அனுமதிக்கும் சிறப்பு விமானங்களுக்கும் பொருந்தாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chennai B.S - Chennai,இந்தியா
04-ஜூலை-202002:26:35 IST Report Abuse
Chennai B.S சம்பாரிக்கிற வரைக்கும் விடமாட்டான் கோவாலு தடை நீளும் மண்ணுக்கு போற உடம்புக்கு எத்தனை ஆசைகள்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-202021:59:31 IST Report Abuse
Tamilan விஞ்சானம் எவ்வளவோ வளர்ந்தும் , இவர்களால் இது எத்தனை நாளுக்கு என்று கணிக்கமுடியவில்லை . இதுவரை, இன்று நாளை என்று நான்கைந்து முறை நான்கு மாதங்களாக நீட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள் . விஞ்சானத்திற்கும், அரசியல் சட்ட அரசுகளுக்கும் , உலக அரங்கில் தாங்கள் எல்லாவற்றிலும் வளர்ந்துவிட்டதாக பறைசாற்றிக்கொள்பவர்களுக்கும் விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால் இது . ஆனால் , இப்போதும் வெற்றிபெற்றுவிட்டதாகத்தான் பறை சாற்றிக்கொள்கிறார்கள் . இனியும் இது எந்திருந்து வந்தது , எப்படி வந்தது என்று இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதெல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சினையே கிடையாது . அது இவர்களுக்கு கிடைத்த தோல்வியும் கிடையாது .
Rate this:
Cancel
03-ஜூலை-202021:31:07 IST Report Abuse
Ganesan Madurai யோவ் துரை நீ "உசுரோட" இருக்கணுமா வேண்டாமா? வந்துட்டானுங்க நாரவாயனுஙக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X