பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவுக்கு இன்று(ஜூலை 3) ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பரவல் வேகமாக இருப்பினும், கேரளாவில் ஓரளவில் கட்டுக்குள் வைக்கப்பட்ட்டிருந்தது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால், கொரோனா தற்போது மீண்டும் வேகம் எடுக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில், இன்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனையடுத்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,964 ஆக உயர்ந்தது.


latest tamil news



இன்று பாதிப்பு உறுதியானவர்களில், 138 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 39 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். புதிதாக 201 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 2,098 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
04-ஜூலை-202001:29:09 IST Report Abuse
uthappa தமிழகத்தில் வெறும் மூன்றாயிரம் இருந்த நேரம் கேரளாவை ஒப்பிட்டு , அரசின் மெத்தனமே என்றார்கள் .இப்போது அங்கும் சிறிது சிறிதாக அதிகம் ஆகினறது.இப்போது கொரோனா பற்றிய விவரங்களும், மருத்துவ உபகரணங்களும் அப்போதை விட அதிகம் கிடைக்கின்றஷு.கேரளா சீக்கிரமவிடுபட வேண்டும்.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
03-ஜூலை-202022:10:08 IST Report Abuse
Balasubramanian Ramanathan இந்த செய்தி தவறாகத் தான் இருக்கும் ‌. ஏனெனில் கேரளா புண்ணிய பூமி. அங்கே ஆட்சி நடத்துபவர் உத்தம சீலர். உண்மை அறிய கமல்ஹாசன், அந்த ஊர்காரர் சைமன், விஜய் ரசிகர்கள் திமுக தலைமையென யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெளிவு பெறுங்கள். தமிழ் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X