அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கிராமங்களிலும் கொரோனா போர்க்கால நடவடிக்கை தேவை'

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement
'கிராமங்கள், கொரோனா போர்க்கால நடவடிக்கை தேவை'

சென்னை : 'கிராமங்களிலும், கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளதால், போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்திஉள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழகத்தில், சென்னை தவிர்த்து, கொரோனா பரவல் அதிகமுள்ள முதல் ஐந்து மாவட்டங்களில், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளன.கிராமங்களில், அபாயகரமான சூழல் உருவாகி விடக்கூடாது. எனவே, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, 32 தகவல்கள் கோரி, தி.மு.க., மாவட்ட செயலர்களை, கலெக்டர்களிடம் மனு அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.கிராமப்புற அரசு மருத்துவமனைகளில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு சிகிச்சை அளிக்க, படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் தீவிரமாக பரவும், கொரோனா நோய் தொற்றை தடுக்க, கண்டுபிடிக்க, சிகிச்சைஅளிக்க, விரிவான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.'தொற்று பரவல் அதுவாகவே தணியட்டும்; அப்போது, நம்மால் தான் தடுக்கப்பட்டு தணிந்தது என்ற பெயரை எடுத்துக் கொள்ளலாம்' என நினைத்து, உடனே திட்டமிட்டு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருக்கக்கூடாது.அப்படி இருந்தால், ஆபத்தான கட்டத்தை, அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்து, மக்களை காப்பாற்ற, அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


அரசு டாக்டர் மரணம்: ஸ்டாலின் வேதனை



கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சுகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவரின் மரணம், கொரோனா சிகிச்சையில் முன் களவீரர்களாக இருப்போரை பாதுகாப்பதில், அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்து, காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளம்.

அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர், செவிலியர் ஆகியோருக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய் தடுப்பில் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, முன் களப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் உயிரையும் பாதுகாத்திட, இனியொரு மரணம் நிகழ்ந்து விடாமல் தடுத்திட, உரிய மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை, உடனே அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூலை-202014:39:46 IST Report Abuse
unmaitamil இந்த காரோண தொற்று கருணாநிதி ஆட்சியில் வந்திருந்தால், தமிழ்நாடு நோய் தொற்றிலும், மரணத்திலும் முதல் மானிலமாக இருந்திருக்கும். மக்களை காப்பாற்றுவதை விட, கொரோனாவை பெயரில் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று குடம்பதிற்குள்ளும், கட்சிக்குள்ளும் போட்டா போட்டியே நடந்திருக்கும். மக்கள் லட்சங்களில் மடிந்திருப்பர். அப்பனும், மகனும் குடும்பத்துடன் "மானாட மயிலாட" ரசித்துக்கொண்டு, அமெரிக்காவை பார், இத்தாலியை பார் என்று கதை அளந்து, திருட்டு சுப.நாரி பாண்டியனை வைத்து பட்டிமன்றம் நடத்தி இருப்பர். நல்லகாலம் தப்பித்தோம். i .
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
05-ஜூலை-202011:23:34 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பசு பட்டினியாய் உள்ளதை பார்த்து ஓநாய்அழுகிற கதையாய் உள்ளதே....
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
05-ஜூலை-202000:15:05 IST Report Abuse
unmaitamil இப்போது புதிய சினிமாக்களும் திரை அரங்குகளில் இல்லை. காரோண முடக்கத்தால் எல்லாம் முடங்கி கிடக்கிறது. நம் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மனதில் எப்போதும் இறுக்கம் கூடாது. நகைசுவை உணர்வோடு வாழவேண்டும் என பலரும் கூறுகின்றனர். அப்படி மக்களை நகைசுவை உணர்வோடு வைக்க இரண்டு பெரிய நகைசுவை நடிகர்கள் இப்போது பிரபலமாக உள்ளனர். ஒருவர் சுடலை. மற்றவர் நம் பப்பு. தினமும் இவர்களது நகைசுவை செய்திகள் இல்லையென்றால் நம் தமிழக, இந்தியா மக்கள் வெகுவாக மனசோர்வு அடைந்திருப்பர். இந்த இரண்டு நகைசுவை குடும்பங்களுக்கும் நன்றிகள் பல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X