பொது செய்தி

இந்தியா

ஆக., 15ல் கொரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த தீவிரம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஆக., 15ல் கொரோனா ,தடுப்பூசி மருந்து, அறிமுகம், தீவிரம்

புதுடில்லி : உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து, இந்தியாவின், 74வது சுதந்திர தினமான, ஆக., 15ல் அறிமுகமாகிறது. இதன் மூலம், உலகில் முதன் முதலாக கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையை, இந்தியா பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.


அனுமதி



மத்திய அரசின், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான, ஐ.சி.எம்.ஆர்., ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், தேசிய வைரலாஜி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கிஉள்ளது.இந்த மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ள, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, தடுப்பூசி பரிசோதனைக்காக தேர்வு செய்யப்பட்ட, 12 மையங்களுக்கு, ஐ.சி.எம்.ஆர்., டைரக்டர் ஜெனரல், பல்ராம் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.


7ம் தேதி



அதில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான, கொரோனா தடுப்பூசி மருந்தை, அனைத்து பரிசோதனைகளுக்குப் பின், ஆக., 15ல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஆய்வு மையங்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த இலக்கை எட்ட முடியாது. அதனால், அனைத்து ஆய்வு மையங்களும், வரும், 7ம் தேதிக்குள், ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விபரங்கள் உட்பட, தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்வது தொடர்பான அனைத்து ஆவண நடைமுறைகளையும் விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பெருமை



இதேபோல, 'கெடிலா ஹெல்த்கேர்' குழுமத்தைச் சேர்ந்த, 'சைடஸ்' நிறுவனம், 'இசட்ஒய்கோவ் - டி' என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இதை, மனிதர்களிடம் சோதிக்க, ஐ.சி.எம்.ஆர்., அனுமதி வழங்கிஉள்ளது. இதையடுத்து, இம்மாதம், 1,000 பேரிடம் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக, சைடஸ் நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்கள் மூலம், கொரோனா வைரசுக்கு, முதன் முதலாக தடுப்பூசி மருந்து கண்டுபிடித்த பெருமை, இந்தியாவுக்கு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


11,300, 'வென்டிலேட்டர்'கள் வினியோகம்



மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஆரம்பத்தில் வினியோகம் செய்யப் பட்ட மருத்துவ உபகரணங்கள், உள்நாட்டில்தயாரிக்கப்பட்டவை அல்ல; வெளிநாட்டு சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனால், தற்போது பாதுகாப்பு உடை, 'என்95' முக கவசம், 'வென்டிலேட்டர்' என அனைத்து பொருட்களும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகின்றன.
இதன் மூலம், 'ஆத்ம நிர்பார் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா' திட்டங்கள் வலுவடைந்துள்ளன. கடந்த ஏப்ரல், 1ம் தேதி முதல், இதுவரை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், 11 ஆயிரத்து, 300 வென்டிலேட்டர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில், 6,154 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இதேபோல், 1.02 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களும், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, 6.12 கோடி 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மாத்திரைகள், 2.02 கோடி என்95 முக கவசங்கள் மற்றும் 1.18 கோடி பாதுகாப்பு உடை, 'கிட்'களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202023:28:45 IST Report Abuse
முருகன் சோதனைகள் வெற்றி பெற்று குறித்த நேரத்தில் பயன்பாட்டுக்கு வரவில்லை வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
04-ஜூலை-202009:50:47 IST Report Abuse
Ganesh Shetty ஒரு புதிய வைரஸ் தொற்றுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத காலமாகும் இது கூட தெரியாமல் கருத்து தெரிவிக்கிறார்கள் மேலும் இதற்கு மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற வேண்டும் பின்னர் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய வேண்டும் இவ்வளவும் நமது நாட்டில் விரைவாகதான் செய்கிறார்கள் ஆனால் மக்கள் அடிப்படை கூட தெரியாமல் எப்படிதான் குறை கூறுகிறார்கள் என்றே தெரியவில்லை
Rate this:
Cancel
Veeramani Shankar - Hyderabad,இந்தியா
04-ஜூலை-202008:33:10 IST Report Abuse
Veeramani Shankar வாழ்த்துகள். நம்புவோம் நன்றே நடக்கும் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X