சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் செய்து கொலை பூக்கடைக்காரர் சிக்கியது எப்படி?

Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுக்கோட்டை; புதுகை அருகே, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், பூக்கடைக்காரர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே, ஏம்பலைச் சேர்ந்த, 7 வயது சிறுமி கடந்த, 30ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக, ஏம்பல் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்திருக்கும் ராஜா, 25, என்பவரை போலீசார்
 சிறுமி பலாத்காரம் செய்து கொலை பூக்கடைக்காரர் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை; புதுகை அருகே, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், பூக்கடைக்காரர் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, ஆவுடையார்கோவில் அருகே, ஏம்பலைச் சேர்ந்த, 7 வயது சிறுமி கடந்த, 30ம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக, ஏம்பல் பஸ் ஸ்டாண்டில் பூக்கடை வைத்திருக்கும் ராஜா, 25, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வன்கொடுமை, 'போக்சோ' உட்பட, ஏழு பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.

போலீசார் கூறியதாவது:கடந்த, 30ம் தேதி, அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு, ராஜா மாலை கொண்டு சென்றுள்ளார். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்த்த ராஜா, கோவிலில் பொங்கல் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, அழைத்துச் சென்றுள்ளார்.கோவிலில் மாலையை கொடுத்தபின், சிறுமியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று, பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார்.

அவருடன் சிறுமியை பார்த்த கோவில் பூஜாரி உட்பட சிலர் கூறிய தகவல் அடிப்படையில், ராஜாவை கைது செய்தோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலுக்கு, கலெக்டர் உமா மகேஸ்வரி, எஸ்.பி., அருண் சக்திகுமார், அறந்தாங்கி, எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி அஞ்சலி செலுத்தினர்.முதல்வர் அறிவித்த, 5 லட்சம் ரூபாய் நிவாரணம், வன்கொடுமை தடுப்பு சட்ட சீர் உதவித்தொகை, 4.12 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, பெற்றோரிடம் கலெக்டர் வழங்கினார். பின் சிறுமியின் உடல், சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் குடும்பத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க., சார்பில், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
07-ஜூலை-202009:52:20 IST Report Abuse
COW  URINE  SANGI இவன் ஹிந்து மதத்தை சார்ந்தவன் தான் , கோவிலில் வேற்று மதத்தை சார்ந்தவன் பூ விற்க முடியாது
Rate this:
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
08-ஜூலை-202010:49:04 IST Report Abuse
Ram Mayilaiதவறு. மயிலாடுதுறை கூறைநாட்டில் கோவில் வாசலில் முஸ்லீம் தம்பதியினர் பூக்க்கடை வைத்துள்ளனர். இந்துக்கள் பூவும், மாலையும் வாங்கி வருகின்றனர். இது வரை பேதம் பார்த்ததில்லை. இது பல வருடங்களாக உள்ளது. இந்த செய்தியில் குற்றவாளியின் பெயர் உள்ளது. அதுவே போதும், அவன் இந்துதான் என தெரியும். நீங்கள் மதத்தை சொல்ல தேவை இல்லையே நண்பரே....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஜூலை-202005:11:26 IST Report Abuse
J.V. Iyer எதை மறைக்க திமுக வாரி வழங்குகிறது?
Rate this:
Nethiadi - Thiruvarur,இந்தியா
07-ஜூலை-202015:51:11 IST Report Abuse
Nethiadi... திராவிட கழகத்தை வெறுக்கிறது....
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
06-ஜூலை-202020:21:34 IST Report Abuse
Murthy கொடூரனை என்கௌண்டர் செய்ய வேண்டும்..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X