ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: மோடிக்கு சோனியா கடிதம்

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
ஓ.பி.சி., பிரிவினர் , இட ஒதுக்கீடு: மோடி, சோனியா கடிதம்

புதுடில்லி: மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங். தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இதில் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு காங். தலைவர் சோனியா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 15 சதவீதம்; பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீதம்; பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஓ.பி.சி. பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கவில்லை.

இதனால் 2017 முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்கள் 11 ஆயிரம் இடங்களை இழந்துள்ளனர். உயர் கல்வியில் இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது 93வது அரசியல் சட்டத் திருத்தத்துக்கு எதிரானது. இது தகுதியுள்ள ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக்கு தடையாக உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மட்டுமே ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
05-ஜூலை-202014:03:17 IST Report Abuse
Giridharan Srinivasan சோனியா, ஏற்கனவே உங்க காங்கிரஸ் கட்சி "இட ஒதுக்கீடு" என்ற பெயரில் எங்கள் தேசத்தை கெடுத்து குட்டிசுவராக்கி விட்டது போதும். உங்களுடைய கீழ்த்தர அரசியல் போதும். உங்களுக்கு "இட ஒதுக்கீடு" அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள், உங்கள் மகன் ராகுல், மகள் பிரியங்கா, மாப்பிள்ளை மற்றும் அவர்களுடைய குழந்தைகளுடன் இத்தாலிக்கு சென்று "இட ஒதுக்கீடு" அரசியல் செய்யுங்கள்.
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
04-ஜூலை-202023:13:16 IST Report Abuse
Desi இந்தியாவின் சாபக்கேடு இத்தாலியில் இருந்து வந்ததே (மூணு புள்ளி ஒரு ஆச்சரிய குறி)
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
04-ஜூலை-202020:01:59 IST Report Abuse
SIVA G  india சோனியா, முன் உதாரணமா தன் கட்சி பதவிகளிலும், கட்சி சொத்துகளையும் ஒதுக்கட்டும். பின் விருப்ப மனு போடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X