எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

தடுப்பு மருந்து கண்டுபிடித்தது எப்படி : பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ண எல்லா பேட்டி

Updated : ஜூலை 03, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
தடுப்பு மருந்து கண்டுபிடித்தது எப்படி

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., மற்றும் புனே தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து 'கோவாக்சின்' என்ற நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவர் கிருஷ்ண எல்லா அளித்த பேட்டி;


தடுப்பு மருந்து பரிசோதனை எப்படி நடைபெறும்



நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மையங்கள் மூலம் இந்த தடுப்பு மருந்து பேஸ் 1, பேஸ் 2 என இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு சோதனை செய்யப்படும். கோவிட் நெகட்டிவ் உள்ள தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு தடுப்பு மருந்து முதலில் செலுத்தப்படும்.
உடலில் வைரஸ் தாக்கினால் அதை எதிர்த்து போராட நோய் எதிர்ப்பு சக்தியை இது உருவாக்கும். வைரஸ் பல்கி பெருகாமல் அது தடுக்கும். 28 வது நாள் அவரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்படும். அது எங்களது சோதனை மையத்துக்கு அனுப்பி, அங்கு உயிருள்ள வைரசை செலுத்துவோம். அப்போது அந்த வைரஸ் பிரதி எடுத்து பெருகாமல் இருக்கிறதா என்பது குறித்து சோதிக்கப்படும்.


இதில் பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா



நாங்கள் 22 ஆண்டுகள் தடுப்பு மருந்து உற்பத்தியில் அனுபவம் மிக்கவர்கள். 16 தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளோம். ஏற்கனவே ரொட்டா வைரஸ், டைபாய்டு போன்றவற்றுக்கு தடுப்பு மருந்து தயாரித்துள்ளோம். எங்களிடம் சிறந்த விஞ்ஞானிகள் உள்ளனர். சில பேர் இந்திய நிறுவனங்களின் தயாரிப்பு தரம் குறைவாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
உலகம் முழுவதும் தரம் ஒன்றே தான். உலக சுகாதார நிறுவனம் விதிகளின் படி, உலகின் அனைத்து நிறுவனங்களும் அதைத்தான் பின்பற்றுகிறோம். பாதுகாப்பு கட்டமைப்பையும் சிறப்பாக செய்துள்ளோம். எந்தவொரு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கீழே நாங்கள் இல்லை. பக்கவிளைவை பொறுத்தவரை, இது ஒரு புது வைரஸ். இது ஒரு தொடர் ஆய்வு. தொடர்ந்து கண்காணிப்போம்.


ஆக்ஸ்போர்டு, அமெரிக்கா, சீன நிறுவனங்களின் ஆய்வில் இருந்து, நீங்கள் எப்படி வேறுபட்டுள்ளீர்கள்



இதுவரை எந்த தடுப்பு மருந்தும் வணிக பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆக்ஸ்போர்டு போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளது ஆர்.என்.ஏ. வகை. எங்கள் தயாரிப்பு 'இனாக்டிவேட்டடு'
வகை தடுப்பு மருந்து. ஏற்கனவே நாங்கள் கண்டுபிடித்த ஜிகா, சிக்குன் குனியா, ரேபிஸ் போன்ற பெரும்பாலான தடுப்பு மருந்துகள் 'இனாக்டிவேட்டடு' வகையை சேர்ந்தது.
சீன ஆய்வு முடிவை வைத்து, இந்த தடுப்பு மருந்தை இவ்வகையில் தயாரித்துள்ளோம். விலங்குகள் சோதனையில் நுாறு சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.


உங்கள் மருந்து வெற்றி பெறும் என எப்படி நம்புகிறீர்கள்



மனிதர்களிடம் பரிசோதனை நடைபெறும் போதே, தடுப்பு மருந்துக்கான உற்பத்தியிலும் ஈடுபடுவோம். சோதனை வெற்றி பெற்றால், பயன்பாட்டுக்கு வரும். ஏற்கனவே விலங்குகளிடம் செய்த பரிசோதனை துல்லிய வெற்றியை தந்துள்ளது. தேசிய வைராலஜி நிறுவனமும் இதனை சோதித்து உறுதிபடுத்தியுள்ளது. சோதனை வெற்றி பெற்றால் 20 கோடி தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கான இலக்கு உள்ளது.


தடுப்பு மருந்துக்கான விலை என்ன



ரொட்டா வைரஸ் தடுப்பு மருந்து அமெரிக்காவில் ரூ. 6000. நாங்கள் ரூ. 74க்கு விற்கிறோம். அதே நேரத்தில் தரம் அதற்கு இணையானது. இந்திய நிறுவனம் என குறைத்து மதிப்பிட வேண்டாம். கோவாக்சின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறவில்லை. உலகிலேயே மூன்றடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு உள்ள ஆய்வு மையத்தை வைத்துள்ளோம். இதன்காரணமாக பாதுகாப்பான, தரமான கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்போம் என உறுதியாக நம்புகிறேன். கோவாக்சின் மருந்துக்கு இன்னும் விலை நிர்ணயம் செய்யவில்லை. அதே நேரத்தில் எங்களை விட குறைந்த விலையில் யாரும் தர முடியாது.யாருக்கு முதலில் தருவீர்கள்; எப்படி பகிர்ந்து அளிப்பீர்கள்மத்திய அரசு முடிவு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
04-ஜூலை-202021:15:36 IST Report Abuse
venkatan இந்திய நிறுவனத்தின் முயற்சி வெற்றி 100 சதம் பெற நேர் நிலை எண்ணத்தில் வாழ்த்துவோமாகஎல்லாம் வல்ல சூக்ஷும சக்தியாம் இறை உங்களுக்கு துணை நிற்பதாக..
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
04-ஜூலை-202017:09:31 IST Report Abuse
Tamilnesan வாழ்த்துக்கள் ஐயா தமிழன் என்று சொல்லடா.....தலை நிமிர்ந்து நில்லடா......நீங்கள் தமிழ்நாட்டின் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்வோம். நீங்கள் வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூலை-202012:06:14 IST Report Abuse
bigu இதிலும் சீன ஆய்வை வைத்து கண்டுபிடிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
09-ஜூலை-202009:35:47 IST Report Abuse
RaajaRaja Cholanellathilum lollai kandu pidikka endru oru kootam...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X