பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.20 ஆயிரம் கோடி தேவை: மத்திய அரசிடம் வாரியம் கேட்பு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
  ரூ.20 ஆயிரம் கோடி தேவை:  மத்திய அரசிடம் வாரியம் கேட்பு


சென்னை : ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, தமிழக மின் வாரியத்திற்கு, 20 ஆயிரத்து, 623 கோடி ரூபாய் நிதி உதவி செய்யுமாறு, மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்கிடம், தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில், மாநில மின்துறை அமைச்சர்கள் மாநாடு, ‛வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. அதில், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்தபடி, மின் துறை அமைச்சர் தங்கமணி, எரிசக்தி துறை செயலர் பிரபாகர், மின் வாரிய தலைவர் பங்கஜ் குமார் பன்சால், மின் வாரிய இணை மேலாண் இயக்குனர் வினித் பங்கேற்றனர்.


latest tamil newsஇது தொடர்பாக, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:

எந்த சூழலிலும், தமிழக மக்களுக்கு பாதகமான, திட்டம் அல்லது சட்ட திருத்தம் செயல்படுத்த கூடாது என்று வலியுறுத்தி, மத்திய மின்சார சட்ட திருத்தத்தில், தேவையான திருத்தங்களை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய, நிலுவை தொகையை சரிசெய்யும் வகையில், நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு, ஊரடங்கு கால நிதி உதவியாக, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதில், தமிழக மின் வாரியம், 2020 மார்ச் வரை உள்ள, மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவை தொகையை சரிசெய்யும் வகையில், 20 ஆயிரத்து, 623 கோடி ரூபாய்க்கான விண்ணப்பங்களை, மத்திய அரசின், ‛ரூரல் எலக்ட்ரிபிகேஷன், பவர் பைனான்ஸ்' ஆகிய, நிதி நிறுவனங்களிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுத்து, விரைவில் நிதி வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

தமிழகம், அதிகளவு சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களின் நிறுவு திறனை பெற்றுள்ளதால், புதுப்பிக்கத்தக்க கட்டாய மின் கொள்முதல் அளவை, திருப்திகரமாக பூர்த்தி செய்வது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
04-ஜூலை-202010:21:35 IST Report Abuse
Indhuindian நாங்க கேட்டதை நீங்க குடுக்கணும். ஆனா அதுக்கு கண்டிஷனலாம் போட்ட அதுக்கு நாங்க ஒதுக்க மாட்டோம். காசு குடுத்தாச்சுன்னா உங்க வேல முடிஞ்சி போச்சு. அதனால நாங்க எங்களோட மின் வாரியத்தை ஓஷுங்கு பண்ணனும்னா அதெல்லாம் முடியாது. மின் வாரியாம் எங்களுக்கு காமதேனு அதுங்கிட்டே நீங்க கிட்ட கூட வரக்கூடாது
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
04-ஜூலை-202008:01:42 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Our people keep on asking money but centre giving all thu schemes and dbt. These are not able to make money thru this. For political reasons they asking fund and showing that.
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூலை-202003:06:43 IST Report Abuse
jeya kumar Better make it Private limited
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூலை-202011:06:16 IST Report Abuse
தல புராணம்It is already Private limeted. It is also a fact that the farmers are not paid for sugarcane by the sugar mills and the dues run over more than 15,000 crores in TN. So is the case with the TN transportation corporation. The pension scheme is broken so bad. No relief for them. You don't even realize....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X