பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு: மாணவ - மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, 10th grade, SSLC, exams, Karnataka, covid-19 scare

பெங்களூரு,: ''கொரோனா போன்ற அசாதாரண சூழ்நிலையில், 98.06 சதவீதம் மாணவ - மாணவியர் எழுதியதன் மூலம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, கர்நாடகாவில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இம்முறை நடந்த எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, மாநிலத்தின் திருவிழா போன்றிருந்தது,'' என, மாநில தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.


latest tamil news




கர்நாடகத்தில், மார்ச்சில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடக்கவிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்கள், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை ரத்து செய்தன. கர்நாடகாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை ரத்து செய்யப்பட வேண்டுமென்று பலரும் வலியுறுத்தினர்.

ஆனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது.
இம்முறை, 8 லட்சத்து, 48 ஆயிரத்து, 203 மாணவ - மாணவியர், தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும், 2,879 தேர்வு மைங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் உட்பட, ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

ஜூன் 25ல் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. சமூக விலகல் கடைபிடிப்பது; முக கவசம் அணிவது; சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டது.
இதில், 98.06 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதினர். 1.94 சதவீதம் மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆயினர்.ஒரு சில குளறுபடிகள் தவிர, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நல்ல முறையில் நடந்து முடிந்ததாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
04-ஜூலை-202014:02:20 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI இங்கு பெற்றோர்கள் சரிஇல்லை அதற்கு மேலே ஆட்சியாளர்கள் ,எதிர்கட்சிகள் கேக்கவே வேண்டாம் ,சுடலை ரூம்ல இருந்தே ஐயோ ஐயோ ன்னு டான்ஸ் ஆடியிருப்ப ,
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
04-ஜூலை-202012:49:37 IST Report Abuse
vasan முதலில் தமிழ்நாடு மக்கள் தொகை மிகவும் அதிகம் மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடும்போது...அதுவும் இல்லாமல் பரப்பளவு குறைவு இதனால் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் அதிகம்/....அதுவும் இல்லாமல் இந்த காரோண பின் விளைவு மிகவும் தாமதமாக தான் தெரிய வரும்....நாளை அந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு, மாணவர்களுக்கு பாதிப்பு என்றால் அதற்க்கு இந்த அரசு தான் பொறுப்பு......எல்லா மாநிலமும் எதையும் ஆராயாமல் தேர்வு வேண்டாம் என்ற முடிவுக்கு வரவில்லை...ஏதோ இந்த கர்நாடக காரனுங்க பரீட்சை வச்சிட்டானுங்களாம் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் பின் விளைவுகளை யார் அனுபவிப்பது.......
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஜூலை-202009:51:25 IST Report Abuse
vbs manian கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு தேர்வு நன்றாக நடக்கவில்லையா. இங்கு மாணவர்கள் உயிர் பாதுகாப்பு என்று எப்படியெல்லாம் பயமுறுத்தினார்கள். தேறாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X