பொது செய்தி

இந்தியா

சீன மின் சாதன இறக்குமதிக்கு விழுந்தது கட்டுப்பாடு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்கள் இறக்குமதி செய்ய, மின் வினியோக நிறுவனங்கள், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



அத்துமீறல்


லடாக் பிரச்னைக்குப் பின், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என, அத்துறை முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே, 'சிக்னல்' திட்டம் தொடர்பாக, சீன நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்., மாநில மின்துறை அமைச்சர்களுடன், நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இருந்தும், ஆண்டுக்கு, 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதில், சீனாவின் பங்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய். இந்த அளவிற்கு வர்த்தக வாய்ப்பளிக்கும் நாட்டில், சீனா அத்துமீறியுள்ளதை ஏற்க முடியாது. அதனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.

தற்போது, பி.ஆர்., எனப்படும் முன்னுரிமை அந்தஸ்தின் கீழ், அண்டை நாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இனி, சீனா, பாக்., பொருட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மின் சாதனங்களில், 'மால்வேர் அல்லது ட்ரோஜன்' வைரஸ்கள் இருக்கலாம். அவற்றின் மூலம், எங்கிருந்தும், இந்திய மின் வினியோகத்தை முடக்கும் ஆபத்து உள்ளது.


latest tamil news




புதிய திட்டம்


அதனால், மின் வினியோக நிறுவனங்கள், சீன நிறுவனங்களின் மின்சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம். அப்படியே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு இறக்குமதியாகும் சாதனங்கள், ஆய்வு செய்யப்படும். அதில் திருப்தியில்லையெனில், திருப்பி அனுப்பப்படும்.

மத்திய அரசின், 'உதய்' உள்ளிட்ட மூன்று திட்டங்களில் இணைந்துள்ள மாநிலங்களில், மின் வினியோக நிறுவனங்களின் நிதியுதவிக்கு, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மின் வினியோக நிறுவனங்கள், இழப்பை குறைப்பதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதை பின்பற்றாத நிறுவனங்களுக்கு, கடன் அல்லது மானியம் வழங்குவது நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பாக்., சீன மின்சாதனங்கள் இறக்குமதிக்கு, மின் வினியோக நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணையை, மத்திய மின்சார அமைச்சகம், நேற்று மாலை வெளியிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
04-ஜூலை-202012:03:26 IST Report Abuse
bigu என்ன கட்டுப்பாடு. தடை என்று ஏன் சொல்ல மறுக்கின்றார்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூலை-202010:55:44 IST Report Abuse
தல புராணம் சீன மின் சாதனங்கள் மட்டுமா ? தொலைத்தொடர்பு சாதனங்கள், கைபேசிகள் அனைத்திலும் கூட அந்த நீங்கள் கண்டுபிடித்த "மைக்ரோ கோடு" இருக்கும். ஒரு சொடுக்கில் அதை சீனா தனது தொலைத்தொடர்புக்கு மாற்றி ஒட்டு கேட்கலாம். டோக்ளா செய்வது எப்படின்னு சுலபமா தெரிஞ்சிக்கலாம். அதை என்ன செய்ய உத்தேசம்.. முக்கியமானதை விட்டுட்டு மத்ததை மட்டும் நோண்டிக்கிட்டு இருக்கீங்க ஆப்பீசர்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
04-ஜூலை-202010:52:29 IST Report Abuse
தல புராணம் பத்து நாளா இந்த பாட்டை தான் நான் பாடிக்கிட்டு இருக்கேன்.. இப்பத்தான் இவனுங்க முழிச்சி பாக்குறாங்க.. அது சரி, இது நாள் வரைக்கும் இறக்குமதி பண்ண இந்த கருவிகளை, உபகரணங்களை, சாதனங்களை, இயந்திரங்களை எல்லாம் என்ன செய்வீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X