பொது செய்தி

இந்தியா

எல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாக, 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் வரை எல்லை தாண்டி நடைபெற்ற, 2,432
border, cross, attack, pak, india, pakistan, protest, ceasfire, violation, loc, எல்லை, தாண்டுதல், தாக்குதல், பாக்,, இந்தியா, கண்டனம்

புதுடில்லி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாக, 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் வரை எல்லை தாண்டி நடைபெற்ற, 2,432 தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு இடையே, பாக்., ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை தாண்டி நடைபெறும் இத்தகைய தாக்குதல்களையும், ஊடுருவல் முயற்சிகளையும், இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் பேசியுள்ளனர். எனினும், தொடர்ந்து பாக்., எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதை தொடர்கிறது. இதையடுத்து, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-202015:15:02 IST Report Abuse
மலரின் மகள் சீனாவின் ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகளுடனும், ஆக்கிரமிப்பு காஸ்மீரத்து அல்படர் தீவிரவாதிகளுடனும், கில்கிஸ்ட் பல்டிஸ்ட்தான் ராணுவ தளபதியுடனும் தொடர் ஆலோசனை செய்கிறார்கள். சீன இப்போது கையிலெடுத்திருக்கும் முறை, ஆக்கிரமிப்பு காஸ்மீரத்து தீவிரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்புவது அதற்கு சீன மறைமுகமாகவும் அவர்கள் நிறம் வெளியில் தெரிந்து விடாத படிக்கும், பாகிஸ்தான் அவர்களின் ஜிகாதிக்கு உதவுவதாக மறைமுகமாகவும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தீவிரவாதிகள் நமது தில்லைக்குள் நுழைந்து விட எதுவாக தொடர்ந்து பாகிஸ்தான் ஷெல்லிங் செய்கிறது எல்லையில் அதி நவீன துப்பாக்கிகள் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்துகிறது, நோக்கம் தீவிர வாதிகளை நமது தேசத்திற்குள் அனுப்புவது தான். காஸ்மீரத்து விவகாரத்தை தீர்க்காமல் இந்தியாவால் அமைதியாக இருக்கமுடியாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது. நாம் ஆக்கிரமிப்பு காசுமீரையும், கில்கிஸ்ட் பல்டிஸ்டான் பகுதியையும், ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்குடன் இணைக்க வேண்டும். அப்போது அந்த தொல்லை முடிந்து விடும். அடுத்து உடனடியாக பாகிஸ்தானை மிச்ச முல்ல ஐந்து பகுதிகளாக பிரிக்கவேண்டும். இதை செய்து கொண்டே இருக்கும் பொது சீனாவுடனான எல்லையில் பேச்சுக்கள் தொடர்ந்து பேசி கொண்டும் அவர்களை கண்காணித்து கொண்டும் அவர்கள் அங்கே முடங்கி கிடப்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும் டிப்ளமேடிக் ஆகா. முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியை மீட்டு விட்ட பிறகு, சீன ஆக்கிரமித்த பகுதியை மீட்க வேண்டும், அடுத்து திபெத் நம்முடன் நமது குடியில் வாழும் ஒரு உணின் பிரதேசமாக சில சிறப்பு அந்தஸ்துக்களுடன் இந்திய புத்தர்கள் நிறைந்த பகுதியாக மாற்றவேண்டும். பூட்டன் நேபால் தனிநாடுகளாக இருப்பது சரியல்ல, மன்னராட்சி முடிந்த பின்னர் கம்யூனிச ஆட்சி எதற்கு அங்கே அறிமுகமானது? அவைகள் இரண்டும் நமது அண்டை தேசங்கள் அல்ல, எல்லைக்குள் அடங்கிய பகுதிகளாக மாறவேண்டும். அமைதியாக இருக்கும் நமது தேசம். ஜெய் ஜவான்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
04-ஜூலை-202010:34:48 IST Report Abuse
kosu moolai நமக்கு உள்நாட்டு சதிகளை முறியடிப்பதில் தான் அதிகம் கவனம் தேவை. படுத்துக் கொண்டு இருக்கும் போது எப்ப வேணும்னாலும தலையில் கல்லை தூக்கி போட்டுறுவானுங்க.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-ஜூலை-202010:31:51 IST Report Abuse
Anand கண்டனம் வேண்டாம், அவனை துரத்தி துரத்தி அடியுங்கள்.
Rate this:
Bond - Gujarat,இந்தியா
04-ஜூலை-202013:47:31 IST Report Abuse
Bond ok chinavukkum serthu kandanam sonnal keththa irukkume...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X