எல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம்| India lodges strong protest with Pakistan over 'unprovoked ceasefire violations' along LoC | Dinamalar

எல்லை தாண்டி தாக்குதல்: பாக்.,கிற்கு கண்டனம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (8) | |
புதுடில்லி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாக, 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் வரை எல்லை தாண்டி நடைபெற்ற, 2,432
border, cross, attack, pak, india, pakistan, protest, ceasfire, violation, loc, எல்லை, தாண்டுதல், தாக்குதல், பாக்,, இந்தியா, கண்டனம்

புதுடில்லி; போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:பாக்., ராணுவம், சமீப காலமாக, 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக் கட்டுப்பாடு கோட்டை தாண்டி, குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜூன் வரை எல்லை தாண்டி நடைபெற்ற, 2,432 தாக்குதல்களில், இந்தியாவைச் சேர்ந்த, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய தாக்குதலுக்கு இடையே, பாக்., ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை தாண்டி நடைபெறும் இத்தகைய தாக்குதல்களையும், ஊடுருவல் முயற்சிகளையும், இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக, இரு நாட்டு ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் பேசியுள்ளனர். எனினும், தொடர்ந்து பாக்., எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதை தொடர்கிறது. இதையடுத்து, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X