லடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
japan, india, ladakh, solidarity, India-china border, border dispute, ஜப்பான், இந்தியா, ஆதரவு

புதுடில்லி: 'லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்' என, ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக்


latest tamil news



எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-202014:41:04 IST Report Abuse
மலரின் மகள் உலகோடு இணைந்து வாழ்கின்ற நாம் உலகத்திற்கு எத்துணையோ அமைதி அன்பு போத்தித்த தலைவர்கள் மதங்களை உருவாக்கி உலகத்திற்கு வழங்கியிருக்கிறோம். புத்தமதம் பரவிய தேசங்கள் நம்மிலிருந்து அவர்களுக்கு அன்புபோதிக்கப்பட்டது. உலகின் ஏழு சதவீத மக்களை புத்தமதம் பின்பற்ற காரணம் இந்தியா தான். அன்பால் மதம் மாறியவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட தொன்மையான பல அருமை குணங்களை பின்பற்றும் நாம் முதலில் உலகத்திற்கு நமது பக்கத்து நியாயங்களை தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். யாரையும் துன்புறுத்தவில்லை, எந்த தேசத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. நாம் நாமாக இணைந்திருக்கிறோம் சுதந்திரம் அடைந்த பிறகு. முதலில் உலக நாடுகள் குறிப்பாக வல்லரசுகளும் பெரிய பெரிய தேசகினாலும் நம்மை உணரவேண்டும் ஆதரிக்கவேண்டும். அவர்கள் மூலமாகும் சீன பாகிஸ்தான் போன்ற விஷமிகளுக்கு டிப்ளமேடிக் ஆகா அழுத்தங்களை கொடுத்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்து பார்க்கவேண்டும். எதற்கும் அவர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்றால் ராணுவம் தனது இலட்சியத்தை அடையும். அப்போது நம்மை உலக நாடுகள் போற்றத்தான் செய்யும். அதை தான் தீரமாக கனகச்சிதமாக செய்து வருகிறார்கள் அமைத்து அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள். முதலில் அரசியலால் இருப்பவர்கள் தேசத்தின் மேன்மை அவமானம் போன்றவற்றை அறிந்து அதற்குரிய உணர்ச்சிகளை பெற்றவர்களாய் தேசத்தை வழிநடத்தி அவமானத்தை துடைக்கவேண்டும். எத்துணை வருடங்களாக நமது பாரத அன்னை தனது தங்க கிரீடத்தை இழந்து அந்நியர்களிடம் பறிகொடுத்து இருக்கிறாள் என்பதை அறிந்து அதை மீட்பதற்கு முயன்றிருக்கவேண்டும். அதை காங்கிரஸ் செய்யவில்லை என்பதுடன் இப்போது அதன் இன்றைய தலைவர்கள் சீனாவிற்கு ஆதரவாக பேசுகிறார்கள் நம்மை பரிகாசனம் செய்கிறார்கள் எனும்போது இவர்கள் இந்தியர்களாக இருப்பதற்கு தகுதியுடையவர்களா என்று என்ன தோன்றுகிறது. இந்தியன் என்று பெருமையாக பேசுகிறோம். யார் இந்தியர்கள்? இந்திய தேசத்தின் மீது நாட்டு பற்று கொண்டு அதன் விழுமைக்கு உழைப்பவர்கள் இந்தியர்கள். மற்றவர்கள் எல்லோரும் இந்திய மண்ணில் வாழ்ந்தாலும் பிறந்தாலும் அவர்கள் அந்நியர்கள் என்று ஒரு தமிழக வீரகவி பாடியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், திகார் சிறை சென்று வந்தவர்கள் எல்லோரும் திருந்தி வாழவேண்டும் அதற்கு தான் சிறை தண்டனை, அங்கு சென்றும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தால் அவர்களை இனி திருத்த வழியில்லை தண்டனை ஒன்றே இறுதி என்று தான் கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
Covaxin - Bharat Hindustan,இந்தியா
04-ஜூலை-202012:00:38 IST Report Abuse
Covaxin இதுதான் மோடிஜி பல வெளிநாடுகளுக்கு சென்று வந்த பலன்... பல உலக நாடுகளின் முழு ஆதரவும் இந்தியாவுக்கு உள்ளது.. இதெல்லாம் ரூ.200 க்கு ஓட்டை விற்கும் தேச விரோத திராவிட விஷ கும்பலுக்கு புரியாது... தேசவிரோத ஊழல் காங்கி கும்பலுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றே நோக்கம்....
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
04-ஜூலை-202010:29:56 IST Report Abuse
Balasubramanian Ramanathan ஜப்பானின்இந்த நிலைப்பாடாடிற்கு தன்மான தமிழர்கள் எதிர்ப்பு. நீதி கேட்டு உங்கள் தலபுராணத்தை வேளியிடுவோம் என முழக்கம். கட்டாயம் இது போன்ற செய்திகள் வரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X