லடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான்| Japan stands in solidarity with India, says it opposes any unilateral attempts to change the status quo by China | Dinamalar

லடாக் எல்லையில் மோதல்: எதிர்க்கும் ஜப்பான்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: 'லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்' என, ஜப்பான் தெரிவித்துள்ளது.இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும்
japan, india, ladakh, solidarity, India-china border, border dispute, ஜப்பான், இந்தியா, ஆதரவு

புதுடில்லி: 'லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம்' என, ஜப்பான் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், லடாக்கில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல் பற்றி, கூறியிருப்பதாவது:லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக்


latest tamil newsஎல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சு, திருப்திகரமாக இருந்தது. எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள், கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்டது மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X