உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க., - எம்.பி.,யிடமிருந்து கோரிக்கை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement

'தீவிர முயற்சிக்குப் பின், கொண்டு வரப்பட்டு, கிடப்பில் இருக்கும், சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை, பார்லிமென்டில், உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.



latest tamil news




துரதிர்ஷ்டவசம்



பார்லிமென்ட் தி.மு.க., கொறடாவும், மூத்த எம்.பி.,யுமான ராஜாவிடமிருந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு வந்துள்ள கடிதத்தில், கூறப்பட்டுஉள்ளதாவது:சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நம் நாட்டில், காவல்நிலைய விசாரணைகளின்போது 'லாக் அப்' மரணங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கைது செய்யும் போதும், அதன்பிறகு விசாரணை நடத்தும்போதும், போலீசார் எந்தவிதமான வழிமுறைகளை கையாள வேண்டுமென்ற விதிகள் வகுக்கப்பட்டு, அவை சட்டமாகவும் உள்ளன.சட்டத்தின் கீழ் கைது செய்யும் உரிமை, போலீசாருக்கும் இருப்பதைப்போலவே, தன் மீது மனித உரிமை மீறல்கள் நடக்காதபடி, தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை, கைதானவருக்கும் உள்ளது.


latest tamil news



அவசர சட்டம்



இதற்காகவே, 1994ல் தாக்கலான, சட்டக் கமிஷனின், 152வது அறிக்கையில், குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்து, பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டு, அதற்கேற்ப பார்லிமென்டிலும், திருத்தம் கொண்டு வரப்பட்டது.அதன்பின்பும், சித்ரவதைகள் தொடரவே, நீதிபதி சவுகான் தலைமையிலான சட்டக் கமிஷனின், 273வது அறிக்கையின்படி, புதிய பரிந்துரைகளை ஏற்று, 2017ல், சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதா, வடிவமைக்கப்பட்டது.பல்வேறு காரணங்களால், அது கிடப்பிலேயே கிடக்கிறது. சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள், தொடரும்போது இனியும் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, வரும் கூட்டத்தொடரில், அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் அல்லது ஜனாதிபதி மூலமாக அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-ஜூலை-202006:07:35 IST Report Abuse
B.s. Pillai Death of people in custody should be totally avoided. It is cruel treatment beyond tolerable limit had resulted in these deaths. This has to be condemned with the most harsh words and those responsible should be brought to justice very quickly. How many such cases the accused police force had been given punishment ? Such data must be released in the media. Police can only investigate any complaint and arrest the offender but has no judicial power to kill the arrested persons. The judicial tem also should take proper action in such cases, when it is coming in the court agenda. In most of such cases, it is common to release the offenders. It should not happen unless otherwise it is proved beyond doubt that hte concerned personnel are totally innocent.
Rate this:
Cancel
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
04-ஜூலை-202020:38:34 IST Report Abuse
Natarajan Ramasamy அரசாணையை மீறி கடையை திரண்டு வைத்திருப்பதற்கு அபராதம் போடுவதோ அல்லது பூட்டு போட்டு சீல் வைப்பது நடை முறை. இதற்க்கு விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சொல்லவேண்டுமா? இரு உயிர்கள் திரும்பி வருமா? ரவுடி களையும் கிரிமினல் களையும் விசாரித்து உண்மையை வரவழைக்க என்ன என்ன செய்யவேண்டும் என்று சொல்லிய பின் புதிய சட்டம் வரவேண்டும். வெறும் பேசினால் உண்மையை ஒத்துக்கொள்ளக்கூடிய கிரிமினல்கள் வாழும் சமுதாயத்தில் நாம் இல்லை. தானாகவே உண்மையை ஒத்துக்கொள்ளும் கிரிமினல்கள் இல்லை. எல்லோருக்கும் POLYGRAPH டெஸ்ட் எடுக்க புதிய சட்டம் வழிவகுக்குமா? உண்மையை எப்படி கொண்டுவரமுடியும் என்று சொல்லாமல் புதிய சட்டம் வந்தால் ஒன்று குற்றவாளிகளை சட்டத்தின் முன் எப்படி நிறுத்தமுடியும். புதிய சட்டமும் பெயரளவில் இருக்கும்.
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
04-ஜூலை-202019:51:51 IST Report Abuse
Nalam Virumbi Unmaitamil அவர்களின் கருத்து ஏற்புடையது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X