முலாயம் மருமகளுக்கு பாதுகாப்பு; பா.ஜ.,வில் இணைய வாய்ப்பு?

Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணாவுக்கு, மாநில அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து அவர், பா.ஜ., வில் சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.latest tamil newsபராமரிப்பு:


உ.பி.,யில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. முலாயம் சிங்கின் இளைய மகனும், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் இளைய சகோதரருமான பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா. இவர், சமீபகாலமாகவே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். பசு பராமரிப்பு மையத்தையும் நடத்தி வருகிறார். உ.பி.,யில், 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அகிலேஷ் யாதவின் நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்துள்ள அபர்ணா, அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், அபர்ணாவுக்கு, 'ஒய்' பிரிவின் கீழ், சிறப்பு பாதுகாப்பு வழங்கி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, உ.பி.,யில், 2022ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன், அவர், பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அபர்ணா கூறியதாவது: நான் இன்னும் சமாஜ்வாதி கட்சியில் தான் உள்ளேன். அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் நானும் ஒருத்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.


latest tamil newsநடவடிக்கை:


சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக நம் நாடு விளங்குவதற்கு அடித்தளம் போட்டவர் பிரதமர் மோடி. உ.பி., முதல்வர் ஆதித்யநாத்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பாராட்டும் படி செயல்பட்டு வருகிறார். சமாஜ்வாதி கட்சியில் கட்டுப்பாடு இல்லை. பெண்களுக்கு கட்சியில் உரிய முக்கியத்துவம் தரவில்லை. முலாயம் சிங் யாதவ், எதற்காக கட்சி துவங்கினாரோ, அந்த நோக்கத்துக்கு எதிராக சமாஜ்வாதியின் தற்போதைய தலைமை செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

அபர்ணாவை, பா.ஜ.,வுக்கு இழுத்து, சமாஜ்வாதி கட்சியை பிளவு படுத்துவதற்காகவே, அவருக்கு போலீஸ் பாதுகாப்பை, முதல்வர் ஆதித்யநாத் அளித்துள்ளதாக, சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-202018:02:19 IST Report Abuse
Endrum Indian இங்கே பாருங்க யாரு ஆட்சியில் இருக்கின்றார்களோ அந்த கட்சியில் என் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நிச்சயம் இருக்கவேண்டும் அப்போ தான் நாங்கள் செய்த ஊழல் அமுக்கப்படும், எங்கள் ஊழல் சொத்துக்கு ஒரு கேடும் நிகழாது. இது தான் எங்கள் தலையாய கொள்கை - இப்படிக்கு ஊழலில் ஊறிய அரசியல் குடும்பங்கள்
Rate this:
Cancel
04-ஜூலை-202016:31:23 IST Report Abuse
kulandhai Kannan கமல் முயற்சித்து, இவரை மக்கள் நீதி மய்யம் உ.பி கிளையின் தலைவராக்கலாம்.
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
04-ஜூலை-202016:30:56 IST Report Abuse
JIVAN Ovvoru katchi aluvalagathilum narigal jakirathai ru ezhuthi vaikkanum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X