6 வங்கிகளில் ரூ.350 கோடி மோசடி செய்த தொழிலதிபர் கனடாவுக்கு ஓட்டம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement

புதுடில்லி: ஆறு வங்கிகளில், 350 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கனடாவுக்கு தப்பிவிட்ட, பஞ்சாபை சேர்ந்த தொழிலதிபர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.latest tamil news


பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட, 'பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட்'டின் நிர்வாக இயக்குனர், மஞ்சித் சிங் மக்னி. இவர் மகன் குல்வீந்தர் சிங் மக்னி, மருமகள் ஜஸ்மீத் கவுர் ஆகியோரும், நிறுவனத்தின் இயக்குனர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும், கனரா வங்கி கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள வங்கிகளிடம், 350 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்தனர். ஆனால் வாங்கிய கடனை, மஞ்சித் சிங் மக்னி குடும்பம் திருப்பிச் செலுத்தவில்லை.

இது தொடர்பாக வங்கிகள், பலமுறை, 'நோட்டீஸ்' அனுப்பியும், மக்னி குடும்பத்தினர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையே, 2018ல் மக்னி, வட அமெரிக்க நாடான கனடாவுக்கு சென்று விட்டது தெரிந்தது. இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக, கடந்த ஆண்டு மார்ச்சில், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் புகார் செய்தன. இது பற்றி, சி.பி.ஐ., யிடம் உடனடியாக புகார் செய்யுமாறு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. ஆனால், வங்கிகள், கடந்த மாதம் தான், சி.பி.ஐ.,யிடம், இந்த மோசடி பற்றி புகார் செய்தன.


latest tamil news


இதையடுத்து, தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக, அமிர்தசரசில் உள்ள, மகன் வீடு மற்றும் நிறுவனத்தில், இரண்டு நாட்களுக்கு முன், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சி.பி.ஐ.,யிடம் உடனடியாக புகார் செய்ய, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டும், வங்கிகள், 15 மாதங்கள் கழித்து, புகார் செய்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
05-ஜூலை-202023:09:01 IST Report Abuse
Amirthalingam Shanmugam 350 கோடி மக்களின் வரிப்பணம் ....அரசாங்க ஊழியர்களின் தண்ட சம்பளத்தின் ஒரு பகுதி.
Rate this:
Cancel
SANKARANARAYANAN S - chennai,இந்தியா
05-ஜூலை-202019:35:46 IST Report Abuse
SANKARANARAYANAN S அரசுக்கு ஒரு அருமையான பரிந்துரை/வேண்டுகோள்: ரூபாய் 50 கோடிக்கு மேல் கடன் வாங்குவோர் வெளிநாடு செல்லும் முன் வங்கியிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். இல்லையெனில் பாஸ்போர்ட் முடக்க வேண்டும்
Rate this:
Cancel
Rajan - Gaborone,போஸ்ட்வானா
05-ஜூலை-202000:43:32 IST Report Abuse
Rajan ஒரு வருட தாமதம். இந்த ஒருவருடத்திற்கான முந்நூற்று ஐம்பது கொடிக்கான வட்டியினை சம்பந்தப்பட்ட வங்கிகள் அரசுக்கு அல்லது ரிசர்வ் வங்கிக்கு கொடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்று காலதாமதம் (விசாரணை ஆரம்பத்திற்கெய) குறையும் சேமிப்பு கணக்கில் ஒரு வங்கி பண பரிமாற்றத்திற்கோ அல்லது ஏடிஎம் உபயோகத்திற்கு (யோசித்து ) கட்டணங்கள் வாங்கும் வங்கிகளுக்கு இந்த தொகை ஒன்றும் பெரிதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X