பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தாக்கத்தில் சென்னையின் வேகத்தில் செல்லும் மதுரை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Madurai, CoronaVirus crisis, corona Spread, Corona Cases, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu, chennai, மதுரை, கொரோனா, பாதிப்பு, பரவல், சென்னை

மதுரை: மதுரையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தாக்குதல் மக்களை மிரட்டுகிறது. பாதிப்பின் வேகத்தில் சென்னையை மதுரை துரத்தி வருகிறது.

அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் கொரோனா தன் தாண்டவத்தை துவக்கியபோது, அந்நகரை 'ஆவிகளின் நகர்' என வர்ணித்தனர். அதே காலகட்டத்தில் படிப்படியாக சென்னையில் பாதிப்பு அதிகரித்தது. அமெரிக்க தலைநகர் நிலை நம் மாநில தலைநகருக்கு நேர்ந்துவிடக்கூடாது என வேண்டினோம். ஆனால் நம் தலைநகரையும் கொரோனா மிரட்டி வருகிறது. தலைநகர் நிலை மதுரைக்கு வந்துவிடக்கூடாது என நினைத்தோம். ஆனால் தூங்கா நகரையும் வைரஸ் விட்டுவைக்கவில்லை. மின்னல் வேகத்தில் மதுரை பாதிப்பு உயர்கிறது. இங்கு சென்னையையே விஞ்சி விடுமோ என்ற அச்சம் தொற்றியுள்ளது.


latest tamil news


மதுரையில் பாதிப்பு துவங்கி 100 நாளை கடந்துவிட்டது. ஆனால் வைரஸின் பரவல் வேகம் ஜூன் பாதியில் தான் துவங்கியது. 500ஐ தொட்டது தான் தாமதம், 'ஜெட்' வேகத்தில் 3 ஆயிரத்தை கடந்துவிட்டது. சென்னையின் மக்கள் தொகை, அடர்த்தி ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் மதுரையில் மக்கள் தொகை, அடர்த்தி பல மடங்கு குறைவு. மதுரையில் 100 பேர் பாதித்தால் சென்னையில் 1000 பேர் பாதிப்பதற்கு சமம். ஆனால் சென்னைக்கு இணையாக மதுரையிலும் பாதிப்பு வேகம் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அதாவது ஏப்.,21ல் சென்னை பாதிப்பு 350 ஆக இருந்தது. 11 நாள் கழித்து 1000ஐ தொட்டது. மதுரையில் ஜூன் 10ல் 350 ஆக பாதிப்பு இருந்தது. ஆயிரத்தை தொட 15 நாள் தேவைப்பட்டது. அதன் பின் ஏற்பட்ட மாற்றம் தான் அதிர்ச்சி தருகிறது. மே 3ல் 1400 ஆக இருந்த சென்னை பாதிப்பு, அடுத்த 5 நாளில் 3 ஆயிரத்தை கடந்தது. அதே போன்று ஜூன் 26ல் 1400 ஆக இருந்த மதுரை பாதிப்பு, அதே 5 நாளில் 3 ஆயிரத்தை தொட்டுவிட்டது.


பரிசோதனை குறைவு


latest tamil news


இத்தனைக்கும் சென்னையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் பெருமளவு குறைவான பரிசோதனை தான் மதுரையில் நடக்கிறது. தலைநகரின் மருத்துவ வசதியில் பாதியளவு கூட இல்லாத தூங்கா நகர், இதே வேகம் தொடர்ந்தால் எப்படிதான் தாங்குமோ. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு தான் அவசியம். அவசரம் என்றால் மட்டும் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை காத்தல் என மதுரை மக்கள் நினைத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும்.


கவலை தரும் பலி


latest tamil news


மதுரையில் கடந்த 12 நாளில் மட்டும் 2476 பேரை வைரஸ் தாக்கியுள்ளது. மதுரை பாதிப்பு சென்னைக்கு இணையான வேகத்தில் செல்கிறது என்றால், இறப்பு இன்னும் வேகமெடுத்துள்ளது. அதாவது, சென்னையில் பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்த போது, அங்கு தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. ஆனால் தற்போது மதுரை அதே 3 ஆயிரம் பாதிப்பை கடந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை விட ஒரு மடங்கு அதிகமாகும்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
04-ஜூலை-202014:21:51 IST Report Abuse
Raj மதுரை எங்கள் மதுரை மீண்டு வரும் விரைவில் எங்கள் வகை போல
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
04-ஜூலை-202013:51:32 IST Report Abuse
நிலா ஆமாம் எங்கள் அபார்மெண்டில் தாய் மகன் இருவருக்கும் அதனால் எங்கள் தெரு அபார்மெண்ட் எல்லாம் லாக் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லவில்லை வீட்டிலேயே தனிமைபடுத்தி வைத்துள்ளார்கள் யாவருக்கும் பயம் கலந்த வாழ்க்கை தினமும்
Rate this:
Cancel
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
04-ஜூலை-202013:44:49 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI மதுரையை மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் காப்பாற்றணும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X