பொது செய்தி

தமிழ்நாடு

'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிகரெட், தம், கொரோனா, ஆண்கள், Covid-19 crisis, men, women, statistics, coimbatore, Covid-19 in tn, corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases in TN, corona crisis, covid 19 pandemic, tamil nadu

இந்த செய்தியை கேட்க

கோவை: வயது வேறுபாடின்றி கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், மாநில அளவில் மட்டுமின்றி கோவை மாவட்ட அளவிலும் புள்ளிவிபரங்களை ஒப்பிடும் போது, பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், இ.எஸ்.ஐ., மற்றும் அரசு மருத்துவமனையில், கடந்த மார்ச் முதல் இதுவரை, 874 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 608 பேர் கோவையை சேர்ந்தவர்கள்; மீதமுள்ளவர்கள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில், பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்.

மாநில அளவில் ஒப்பிடுகையில், 0 முதல் 12 வயதுடையவர்களில், 2,607 பேர் ஆண் குழந்தைகள். 2,446 பேர் பெண் குழந்தைகள்.அது போலவே, 13 முதல் 60 வயது வரையுள்ளவர்களில், 52,797 பேர் ஆண்கள்; 32,486 பேர் பெண்கள். 22 மூன்றாம் பாலினத்தவர்.60 வயதுக்கு மேல் 7,612 பேர் ஆண்கள். 4,751 பேர் பெண்கள் உட்பட, 12,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வயது பிரிவின் கீழும் ஆண்களுக்கே, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்கள் அதிகமாக பயணம் செய்வதாலும், புகைப்பிடிப்பதாலும் எளிதாக தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, பாதிக்கப்பட்ட ஆண்கள் மூலமாகவே, பெரும்பாலான பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


கோவை மாவட்டத்தில், 608 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதில், 318 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். 287 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்களை விட ஆண்களுக்கு, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான். பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் அதிகமாவதற்கும், இறப்புக்கும் வேண்டுமானால் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கிய காரணம் என கூறலாம்.
- ரமேஷ்குமார்
சுகாதாரத்துறை துணை இயக்குனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
04-ஜூலை-202015:38:07 IST Report Abuse
Raj டாஸ்மாக் ஒரு காரணம்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-ஜூலை-202014:20:02 IST Report Abuse
A.George Alphonse புகை பிடிக்கும் பழக்கம் எல்லா நாடுகளிலும் மிகமிக குறைந்துவிட்டது. இதெல்லாம் நம்பும்படியாக இல்லை. காரோணவுக்கு ஆண், பெண், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம், அரசியல் தெரியாது. எல்லோரையுமே சமமாக மதித்து பிடித்து ஆட்டிப்படைக்கும் அரக்கனும், பிசாசும் ஆகும். நாம் உஷாராய் இருந்தால் அண்டாத கோழை.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
04-ஜூலை-202009:54:09 IST Report Abuse
siriyaar சாராயம் குடிக்கிறவன், புகை பிடிக்கிறவன் , கள்ளகாதல் பண்ணறவன் , அசைவம் சாபிடறவன் எல்லாரையும் நல்லா புடிச்ச கோரோனா உலுக்கினால் உலகில் பல நல்லது நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X