சீனாவுக்கு நெருக்கடி: அமெரிக்கா நடவடிக்கை

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சீனா, அமெரிக்கா, நெருக்கடி, பார்லிமென்ட், அமெரிக்க பார்லிமென்ட்,  மசோதா, ஹாங்காங், US Senate, us, america, passes bill, China, Hong Kong law,

வாஷிங்டன் : ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறிக்கும் சீனாவுக்கு நெருக்கடி தரும் வகையில் அமெரிக்க பார்லிமென்டில் முக்கியமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்தவர்களுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வங்கிகளுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்று உள்ளன.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங்கை 1997ல் சீனா வசம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்தனர். அப்போது ஹாங்காங் சுதந்திர மாக செயல்படுவதற்கு சீனா ஒப்புதல் அளித்தது.இதன்படி சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டாலும் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களில் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் இருந்து வந்தது.


பாதுகாப்பு


இந்நிலையில் ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் சீனா சமீபத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அங்கு அமல் படுத்தியது.இந்த சட்டத்தின் கீழ் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோரை 10 ஆண்டு வரை சிறையில் அடைக்க முடியும். ஹாங்காங்கில் உள்ள குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தவும் இந்த சட்டம் உதவும்.இதற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தைவலுக்கட்டாயமாக சீனா அமல்படுத்தியுள்ளது.

இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி தரும் நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் துவக்கியுள்ளன. அமெரிக்க பார்லி மென்டில் இது தொடர்பான மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் சீனாவின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தி வருபவர்களை ஒடுக்கும் சீன அதிகாரிகளுடன் வர்த்தக நடவடிக்கை யில் ஈடுபடும் வங்கிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை வலுக்கட்டாயமாக அமல்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தை ஒடுக்கும் போலீசாருக்கு எதிராக சர்வதேசசட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.அவர்கள் சர்வதேச அளவில் வேறு எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கபப்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே 'கடந்த 1997ல் சீனா - பிரிட்டன் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் விதமாக சீனாவின் நடவடிக்கை உள்ளது' என பிரிட்டன் அரசும் தெரிவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் சீன ஆட்சியாளர்கள் திணறி வருகின்றனர்.


ஹாங்காங்கிலிருந்து வெளியேறியபோராட்டக் குழு தலைவர்


latest tamil news




சீனாவின் அத்துமீறலை கண்டித்து ஹாங்காங்கில் நடந்த போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் நதன் லா 26. இவர் ஏற்கனவே ஹாங்காங் மாணவர் அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தார். சீனாவின் அடாவடியை வெளிப்படையாகவே கடுமையாக விமர்சித்ததுடன் போராட்டங்களையும் நடத்தி வந்தார்.இந்நிலையில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நதன் லா ஹாங்காங்கிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தற்போது இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஊழியருக்கு அடைக்கலம்


latest tamil news


ஹாங்காங்கில் செயல்பட்டு வந்த பிரிட்டன் துாதரகத்தில் பணியாற்றி வந்தவர் சிமொன் செங். இவர் சீனாவுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடந்தாண்டு கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் இவருக்கு அரசியல் அடைக்கலம் அளிப்பதாக பிரிட்டன் அரசு தற்போது அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
04-ஜூலை-202014:06:30 IST Report Abuse
Ravi ஈராக் பல ஆண்டுகளாக தங்களிடம் பெரிய படையை வைத்து இருப்பதாக ஜம்பம் அடித்து கொண்டுருந்தது, அமெரிக்கா அடித்த அடியில் அது வெறும் படை சொறி சிரங்கு என்று உலகத்துக்கு தெரிய வந்தது . அது போல் சீனா உலர ஆரம்பித்து அதையும் பலர் நம்பினார்கள், அதில் காங்கிரஸ் காரன் நேரு காலிலேயே விழுந்தார், கொள்ளு பேரன் அமுல் பேபி நாட்டை கொடுப்பதற்கு அக்ரீமெண்ட்டையே போட்டுவிட்டார், அது மோடியிடம் நடக்கவில்லை. அமெரிக்கா கூடிய விரைவில் இந்தியாவின் பலத்தை புரிந்து கொள்ளும் , சீனாவின் முகத்திரை உலகுக்கு இந்தியா புரியவைக்கும் .
Rate this:
Cancel
04-ஜூலை-202012:50:31 IST Report Abuse
kulandhai Kannan இன்று சீனாவை எதிர்க்கும் ஹாங்காங் மக்கள், 1997ல் சீனாவுடன் இணைய ஒப்புக் கொண்டது ஏன்? நினைத்தபோது சேர்ந்து பிரிவது என்பது நாடுகளையே கவிழ்த்துவிடும். இன்று கூக்குரலிடும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்துமீதான கட்டுப்பாட்டை விலக்க மறுப்பது ஏன்? நாளையே கலிபோர்னியா தனிநாடு கோரினால் அமெரிக்கா கொடுத்து விடுமா??
Rate this:
Baskar - Madurai,இந்தியா
04-ஜூலை-202020:23:43 IST Report Abuse
BaskarAmerica, Britain and India democratic country. China is ruled by the dictator party. No communism. Let China first bring democratic process....
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
04-ஜூலை-202012:21:34 IST Report Abuse
RajanRajan SOON CHAINA WILL LOSE EVERY FACE ACROSS THE COUNTRIES ALL OVER.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X