கட்டுமான திட்டங்களில் காலாவதியான விதிமுறைகள்: நிதின் கட்காரி

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
கட்டுமான திட்டங்கள், விதிமுறைகள், நிதின் கட்காரி, சீன நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், கட்காரி, கட்கரி, நிதின் கட்கரி, Nitin gadkari, rules, contract, chinese companies, border crisis, india-china, india, china

புதுடில்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய நிறுவனங்களை பாதுகாக்கவும், அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கட்டுமான திட்டங்களில் நமது விதிமுறைகள் காலாவதியாகிவிட்டன. அவை, ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை கட்டமைப்பதற்கு, அனுபவமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நம்முடைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுபோன்ற பணிகளை, நமது நாட்டில் யாரும் செய்ததில்லை. இதனால், அந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கிடைப்பது இல்லை.


latest tamil news


இதனால், நமது விதிமுறைகள் தவறானவை என நான் கூறியுள்ளேன். இந்திய ஒப்பந்ததாரர்களுக்கு திறமை உள்ள போதிலும், அவர்கள் நிதி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் காரணமாக கூட்டு நிறுவனங்களில் நுழைய வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, சீன நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. அதேபோல், சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதும் சரியானதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

லடாக்கில் கல்வான் பகுதியில், சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, இந்தியாவில் நடக்கும் கட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சீனாவில் இருந்து மின்சார உபகரணங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இந்திய நிறுவனங்களுக்கு மின்சார அமைச்சகம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
04-ஜூலை-202019:43:41 IST Report Abuse
Ray L&T BUILDS RS 1,400 CR, SIX-LANE BRIDGE ACROSS HOOGHLY IN KALYANI, KOLKATA AND MANY MORE ONGOING PROJECTS ANYBODY CAN VISIT THEIR WEBSITE FOR DETAILS
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
04-ஜூலை-202017:16:00 IST Report Abuse
ocean kadappa india எதற்கெடுத்தாலும் சீனாவை தான் நாடணுமா. இதனால் அவனுக்கு திமிர் ஏறி விட்டது. அவனிடம் வாங்க வேண்டிய ரா மெட்டீரியல்களை நாமே செய்து கொள்ளக்கூடாதா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஜூலை-202016:10:30 IST Report Abuse
sankaseshan அது சிறி யோனுக்கான பதில். யார் போட்டு கொடுத்தார்கள் சீட்ட அம்பரமும் மௌன சாமியும் இதை விட்டு டீர்களே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X