கொரோனா குறித்து எச்சரிக்காத சீனா

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஜெனிவா: கொரோனா வைரஸின் ஆரம்பகட்டம் குறித்த தனது அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் புதுப்பித்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்தது சீனாவில் உள்ள தங்கள் அலுவலகம் தான் என்றும், சீனா எச்சரிக்கவேயில்லை என்றும் கூறியுள்ளது.கொரோனா வைரஸ் விஷயத்தில் உரிய நேரத்தில் தகவல்களை அளித்து தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியாதாகவும், சீனாவுக்கு ஆதரவான மனநிலையில்
WHO, First Alert, CoronaVirus in china, China, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus spread, corona outbreak, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, உலக சுகாதார நிறுவனம், சீனா, எச்சரிக்கை

ஜெனிவா: கொரோனா வைரஸின் ஆரம்பகட்டம் குறித்த தனது அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் புதுப்பித்துள்ளது. அதில் கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்தது சீனாவில் உள்ள தங்கள் அலுவலகம் தான் என்றும், சீனா எச்சரிக்கவேயில்லை என்றும் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் விஷயத்தில் உரிய நேரத்தில் தகவல்களை அளித்து தொற்றுநோயை கட்டுப்படுத்த தவறியாதாகவும், சீனாவுக்கு ஆதரவான மனநிலையில் செயல்பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த பல ஆயிரம் கோடி நிதியையும் நிறுத்தினார். சீனாவுக்கு ஆதரவு என்ற இந்த குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்து வந்தது.


latest tamil newsஇந்த விமர்சனத்திற்கு பதில் கூறும் வகையில், தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் சீனாவுடனான தனது தகவல் தொடர்புகளை பற்றிய விவரங்களை ஏப்ரல் 9 அன்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31 அன்று நிமோனியா நோய்களைப் பதிவு செய்ததாக கூறியிருந்ததது. ஆனால் அந்த அறிக்கை சீன அதிகாரிகளால் அனுப்பப்பட்டதா அல்லது வேறு மூலமாக வந்ததா என்ற தகவலை குறிப்பிடாமல் இருந்தது.


latest tamil newsஇந்த வாரம் அந்த தகவல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவலின் படி சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவன மண்டல அலுவலகம் தான் டிசம்பர் 31 அன்று 'கண்டறியப்படாத காரணம் மூலம் நிமோனியா காய்ச்சல் பரவுவதாக' அறிவித்துள்ளது. சீனா அதுவரை வைரஸ் பற்றி வாய் திறக்கவேயில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. பின்னர் அது பற்றிய தகவல்களை சீன அதிகாரிகளிடம் ஜனவரி முதல் தேதி மற்றும் 2-ம் தேதி என இரண்டு முறை கேட்ட பிறகு, ஜன., 3-ம் தேதி சீனா தரப்பிலிருந்து தகவல்களை வழங்கியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
04-ஜூலை-202021:06:34 IST Report Abuse
venkatan இப்படிப்பட்ட அதி தீவிர அவசர தொற்றுக்கள் உலகில் எங்கு ஏற்பட்டாலும் அதை மறுக்க,மறைக்க அல்லது ஏவி விடும் நாடுகளை பயங்கர நாடு என்று அறிவித்து,போர் நடவடிக்கை,தனிமைப்படுத்துல் என்றவாறு நம் உலக சமுதாயம் சட்டரீதியாக ஏது வாக் கவேண்டும்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
04-ஜூலை-202019:12:03 IST Report Abuse
Kumar சீனாக்கு இப்ப பிரச்சனை வரதால அவர்களை காட்டி கொடுக்க வேண்டும். இல்லைனா மத்த நாட்டுல இருந்து சோறு கிடைக்காதுல்ல. இவ்வளவு நாள் வாய மூடிட்டு இப்ப சீனா தான் காரணம்னு தெரியுதா?.எல்லாரும் அதத்தானே சொல்லுராங்க.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூலை-202018:16:40 IST Report Abuse
S. Narayanan பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்படவேண்டிய நாடு சீனா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X