பொது செய்தி

தமிழ்நாடு

14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement
சென்னை வானிலை மையம், தமிழகம், புதுச்சேரி, மழை, சென்னை, வெப்பச்சலனம்,  மிதமான மழை,  மாவட்டங்கள், Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.


latest tamil news




40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X