சாலையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தவர் சடலம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
CoronaVirus death, Patient Body, Bengaluru Street, COVID-19 crisis, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus count, corona toll, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, கொரோனா, வைரஸ், நோயாளி, உடல், தெரு, ஆம்புலன்ஸ், பெங்களூரு

பெங்களூரு: கொரோனா பாதித்தவரை மருத்துவமனை அழைத்து செல்வதற்காக காத்திருக்கையில் உயிரிழந்ததால், 2 மணி நேரமாக சாலையில் சடலத்துடன் ஆம்புலன்சுக்காக உறவினர்கள் காத்திருந்த காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 55 வயது நபர் ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரசு உடல் நிலையும் மோசமடைந்தது. இதனால் அவரது மனைவி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் கோரியுள்ளார்.


latest tamil news


ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து, அவரை வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்தனர். அப்போது திடீரென சரிந்து விழுந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தான் ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது. அதுவரையில் சாலையில் சடலத்துடன் மனைவி மற்றும் உறவினர் இருக்கும் காட்சி இணையத்தில் பரவியது.

இது தொடர்பாக கொரோனா வைரஸ் பொறுப்பு அமைச்சர் ஆர்.அஷோக் கூறுகையில், ‛இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
07-ஜூலை-202016:17:39 IST Report Abuse
TechT which area in bangalore?
Rate this:
Cancel
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
04-ஜூலை-202020:56:39 IST Report Abuse
தமிழ் வேந்தன் ஊழல் புகழ் எடியூரப்பா பிஜேபி ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம்
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஜூலை-202012:20:57 IST Report Abuse
aashikcorrect...
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
09-ஜூலை-202018:48:59 IST Report Abuse
RaajaRaja Cholanok bhai...
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
04-ஜூலை-202014:56:42 IST Report Abuse
Ramona That's all life, whats the use in taking disciplinary action against those responsible, they might be overburdened with work, but a life gone for ever..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X