பொது செய்தி

இந்தியா

புத்தரின் கொள்கைகளில் உலக பிரச்னைக்கு தீர்வு: பிரதமர் மோடி

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புத்தர், பிரச்னை, சவால்கள், கொள்கை, பிரதமர் மோடி, Lord Buddha, ideals, global challenges, PM Modi, International Buddhist Federation, Prime Minister Modi, video conference


புதுடில்லி: உலகம் இன்று சந்தித்து வரும் பெரிய பிரச்னைகளுக்கு, புத்தரின் கொள்கைகளில் தீர்வு உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, ஆஷாத பூர்ணிமா தர்ம சக்ரா திவஸ் விழாவை, சர்வதேச புத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இந்த விழாவில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலகம் இன்று பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இந்த சவாலுக்கான தீர்வுகள், புத்தரின் கொள்கைளில் உள்ளது. அவை கடந்த காலத்திற்கு பொருத்தமாக இருந்ததுடன், தற்போதும் பொருந்துகிறது. எதிர்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது. புத்தரின் போதனைகள் மற்றும் எண்ணங்களை , எப்போதும் இளைஞர்கள் மனதில் வைத்து கொள்ளவேண்டும். இதன் மூலம், அவர்களுக்கு புத்துணர்வு, அமைதி, ஊக்கம் கிடைக்கும்.


latest tamil news




திறமையான இளைஞர்கள் மனதில் உலகத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளது. புத்த தலங்களை இணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். சில நாட்களுக்கு முன்னர், குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்தோம். இதன்மூலம் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஜூலை-202023:36:02 IST Report Abuse
unmaitamil புத்தரை வாழ்த்தி திபெத்தை உற்சாக படுத்தும் ராஜ தந்திரம் வாழ்க.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஜூலை-202023:34:22 IST Report Abuse
unmaitamil அந்நிய சக்திகள் திட்டமிட்டு, போலி இடதுசாரி சித்தாந்தம் என்ற மாயையை மக்கள் மனதில் புகுத்தி, இந்திய கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும், உயர்ந்த தத்துவங்களையும், உண்மை சரித்திரங்களையும் முடிந்தவரை அழித்தனர். அதனால் இப்போது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என எந்த குறிக்கோளும், நல்ல ஆழ்ந்த சிந்தனையும் இல்லாமல் இளைய சமுதாயம் தடுமாறி வாழ்கிறது. உதாரணமாக வாழ்ந்து, வழிநடத்த வேண்டிய தலைவர்கள் மண்ணுக்கும், பெண்ணுக்கும், காசுக்கும் பின்னால் சென்று, இளைஞர்களுக்கு தீய பாதையைத்தான் காண்பித்தனர். இப்போது இந்தியாவிற்கு நல்ல நேரம் பிறந்துள்ளது. இந்திய மக்களுக்கு இப்போதுதான் ஒழுக்கமான, நேர்மையான, உறுதியான தலைவனும், தலைமையும் கிடைத்துள்ளது. இனி தீய சக்திகள் காணாமல் போகும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூலை-202018:09:16 IST Report Abuse
S. Narayanan நமது புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X