சீனா நட்பால் பாக்.,கிற்கு புது நெருக்கடி

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
சீனா, பாகிஸ்தான், இந்தியா, லடாக், சீன அத்துமீறல், உறவு, கோபம், Pakistan, Pak government, China Policy, border crisis, china

இஸ்லாமாபாத்: கொரோனா காலத்தில், இந்தியாவின் லடாக்கில் அத்துமீறிய சீனாவை சர்வதேச நாடுகள் புறக்கணித்து வருகின்றன. இதனால், அந்நாட்டுடன் நெருங்கிய நட்புறவு வைத்துள்ள பாகிஸ்தானுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவுடனான நட்பை, மறுபரிசீலனை செய்யாவிட்டால், தனிமைபடுத்துதல் மற்றும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


சர்வதேச நாடுகள் கண்டனம்உலக நாடுகள் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவின் லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி வந்து இந்திய வீரர்களை கடுமையாக தாக்கியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்தனர். சீன தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டாலும், அது குறித்து வெளிப்படையாக அந்நாடு தெரிவிக்கவில்லை. 43 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இரு நாட்டு உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில், சீனாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள், தூதரக அளவில் சீனாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ள பாகிஸ்தானுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நட்பை மறுபரிசீலனை செய்யாவிட்டால், சர்வதேச நாடுகளின் புறக்கணிப்பு மற்றும் கண்டனத்திற்கும் ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news

பாக்., கெஞ்சல்இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், சீனாவுடனான நட்பு குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், சீனாவை தனிமைப்படுத்தும், பொருளாதார சக்தி மிக்க நாடுகளின் கோபத்திற்கு பாகிஸ்தானும் ஆளாக வேண்டியிருக்கும் என பிரதமர் இம்ரான் கானுக்கு, பாக்., வெளியுறவு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தான், ஐரோப்பிய வான்வெளியில், பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கும், ஐரோப்பிய நாடுகளில் தரையிறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயிற்சி பெற்ற வீரர்கள் தான் விமானங்களை இயக்குகின்றனர். இதனால், தடையை நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியனிடம் பாகிஸ்தான் எவ்வளவோ கெஞ்சியும் அதனை கேட்பதற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. கொரோனா காலத்தில் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்ட சீனாவை, தூதரக ரீதியில் ஐரோப்பிய நாடுகள் தனிமைபடுத்தி வரும் நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தானும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


கோபம்ஏற்கனவே பாகிஸ்தானில், சீனா மீது ஒரு அதிருப்தி உருவாகியுள்ளது. சீனா -பாகிஸ்தான் பொருளாதார காரிடர்(சிபிஇசி) திட்டத்தின் கீழ், பலுசிஸ்தான், கில்ஜித்- பல்டிஸ்தான் பகுதிகளில் சீனா இயற்கை வளங்களை சூறையாடி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கோபமடைந்துள்ளனர். மேலும், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் உள்ளூர் மக்களை வேலைக்கு தேர்வு செய்யாமல், சீனாவில் இருந்து குறைந்த சம்பளத்திற்கு ஆட்களை கொண்டு வந்துள்ளன.
மேலும், அப்பகுதி பாரம்பரியம், நடவடிக்கைகள் ஆகியவற்றை சீன நிறுவனங்கள் மதிக்காமல், அவற்றை சந்தேகத்துடன் பார்க்கின்றன. இதுவும் அப்பகுதி மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதியை ஆக்கிரமிக்க முயலும் சீனா, ஏன் பாகிஸ்தானையும் ஆக்கிரமிக்க முயற்சி செய்யாது என அப்பகுதிவாசிகள் கேள்வி எழுப்புவதுடன், சீன கலாசாரம் தங்கள் கலாசாரத்தை அழித்துவிடுமோ என கில்ஜித் பல்டிஸ்தான் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.உய்கூர் முஸ்லீம்களை சீன அரசு நடத்தும் விதம் குறித்து, அந்நாட்டு மதரீதியிலான வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
06-ஜூலை-202022:41:54 IST Report Abuse
Ray பாகிஸ்தான் இன்னொரு திபெத் ஆகலாம்
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
06-ஜூலை-202020:31:39 IST Report Abuse
Ray நட்பு வேறு கொத்தடிமை வேறல்லவா?
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
04-ஜூலை-202023:49:46 IST Report Abuse
unmaitamil பப்புவுக்கும், அவர் குடும்ப அடிமைகளுக்கும் இப்போதாவது காரணம் புரிந்திருக்கும் மோடியின் பலநாட்டு பயணங்கள். அந்த நாட்டு நட்பின் பலன்கள். பட்டய்யா ஜாலி பயண மன்னனின் அடிமைகளுக்கு இது புரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X