பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு 11,300 வென்டிலேட்டர் வழங்கப்பட்டுள்ளன: சுகாதார அமைச்சர்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement
Made In India, Ventilators, Harsh Vardhan, Dispatched, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, coronavirus india, corona india, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, ஹர்ஷ்வர்தன், மேட்இன்இந்தியா, வென்டிலேட்டர்,

புதுடில்லி: ‛மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

பிஎம் கேர்ஸ் நிதி மூலம், 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து கொரோனா சிறப்பு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், எஞ்சிய 20 ஆயிரத்தில் அக்வா ஹெல்த்கேர் 10 ஆயிரம், ஏஎம்டிஇசட் பேசிக் 5,650, ஏஎம்டி இசட் ஹை என்ட் 4000, அலைட் மெடிக்கல் 350 வென்டிலேட்டர்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஏப்ரல் மாதத்தில் இருந்து 2.02 கோடி N95 மாஸ்க்குகள் மற்றும் 1.18 கோடி பி.பி.இ கிட் எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் மாநிலங்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிராவிற்கு 11.78 லட்சம் பிபிஇ கிட்கள், 20.64 லட்சம் மாஸ்க்குகளும், டில்லியில் 7.81 லட்சம் பிபிஇ கிட்கள், 12.76 லட்சம் மாஸ்க்குகளும் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news


‛மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மொத்தம் 11,300 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 6,154 வென்டிலேட்டர்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1.02 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 72,293 ஆக்ஸிஜன் படுக்கைகளும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X