பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு; சென்னையில் சில தளர்வுகள்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கினை நீட்டித்து முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news



இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியது. இதை தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.


latest tamil news



இந்த ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு (ஜூலை 12ம் தேதி வரை) நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்யாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




சென்னையில் டீக்கடைகள் திறக்க அனுமதி


இது போல் சென்னையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் ஆன்லைன் டெலிவரிக்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. நகை, ஜவுளிக்கடைகள் மாலை 6 மணி வரை திறக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
04-ஜூலை-202020:05:28 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy கடையை எப்போ சார் திறப்பீங்க?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூலை-202018:05:47 IST Report Abuse
S. Narayanan இனியாவது மக்கள் தன்னிலை உணர்ந்து பாதுகாப்புடன் செயல் படவேண்டும்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
04-ஜூலை-202017:24:30 IST Report Abuse
R.Kumaresan தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களுக்கு ரூ1000 தந்தாலும் பரவாயில்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X