பொது செய்தி

இந்தியா

மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
கான்பூர்: உ.பி.,யில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்து, பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா மெட்ரொ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் 4 நிறுவனங்கள்
Bombardier, UP Metro, Contract, Train Sets, Supply, Metro Projects, agra, india, metro rail, உபி, மெட்ரோ, ஒப்பந்தம், சீனா, இந்தியா, நிறுவனம்

கான்பூர்: உ.பி.,யில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்து, பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கான்பூர், ஆக்ரா மெட்ரொ ரயில் திட்டங்களுக்கான ஒப்பந்தத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் 4 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்பியிருந்தன. இதில், சீனாவை சேர்ந்த சி.ஆர்.ஆர்.சி நாஞ்ஜிங் புஷேன் என்ற நிறுவனமும் அடங்கும். தொழில்நுட்ப ரீதியாக தகுதியான நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிகளை, உ.பி., மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நேற்று (ஜூலை 3) திறந்தது.


latest tamil news


இதில், சீன நிறுவனத்தை தகுதியிழப்பு செய்த மெட்ரோ நிர்வாகம், குறைந்த கட்டணம் கோரியிருந்த பாம்பார்டியர் ட்ரான்ஸ்போர்ட் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது. 3 பெட்டிகள் கொண்ட 67 மெட்ரோ ரயில்களுக்கான இந்த ஒப்பந்தத்தில் சப்ளை, டெஸ்ட்டிங் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு, சிக்னல் கட்டுப்பாட்டுகள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. முதல் ரயிலை 65 வாரத்திற்குள் வழங்குமாறு மிகவும் நெருக்கமான இறுதிக்கெடுவை உ.பி. மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ளது. நவீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில்களை பாம்பார்டியர் நிறுவனம் தனது குஜராத் ஆலையில் தயாரித்து வழங்க இருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Charles - Burnaby,கனடா
08-ஜூலை-202023:27:09 IST Report Abuse
Charles Bombardier ஒரு சிறந்த கனடாவின் நிறுவனம். மெட்ரோ ரயில்கள் தயாரிப்பதில் கெட்டிக்கார்கள். Vancouver மெட்ரோ ரயில்கள் எல்லாம் இந்த நிறுவனம்தான் தயாரித்தது.. கனடாவிற்கு இந்த ஆர்டர் கொடுத்ததற்கு மிக்க நன்றி
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-ஜூலை-202016:42:04 IST Report Abuse
தமிழவேல் இதுவும் இந்திய நிறுவனம் அல்ல..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-202013:30:36 IST Report Abuse
மலரின் மகள் இன்றும் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் கொல்கத்தாவின் பாதாள ரயில் அரைநூற்றாண்டுக்கு முன்னரே நமது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாகியது தான். னாரே ஜப்பானுக்கு நிகராக செய்யப்பட்டது. மிக பெரியளவில் உள்ளூர் நிர்வாகங்களுக்கு வளர்ச்சி பணிக்கு உதவ வில்லை என்றால் நம்மால் எப்படி சர்வதேசத்தினரை விட பெரியளவில் வளர முடியும். பத்து ஐம்பது சதவீதம் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை உள்நாட்டு நிறுவனங்களை வளர்க்கவேண்டும். அது உள்ளூரில் பல்வேறு வேலைவாய்ப்புக்களை புதிய தொழில் முனைவோர்களையும் பெருமளவில் ஊக்குவிக்கும். ஜுராசிக் பார்க் போன்ற ஒரு சில படங்களை தருவிப்பதில் தவறில்லை மற்றபடி செந்தில் கவுண்டமணி வடிவேல் படங்கள் பெருமளவிற்கு ஆதரவு தரப்படவேண்டும்.
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்TRAIN-18, INDIA’S FIRST AND FASTEST TRAIN SET, MANUFACTURED IN CHENNAI’S INTEGRAL COACH FACTORY (ICF) TICKED ALL THESE BOXES. MADE AT A COST OF RS 97 CRORE, IT HAS RUN 1 LAKH KM WITHOUT ANY HITCH ON THE NEW DELHI-VARANASI ROUTE AS THE VANDE BHARAT EXPRESS. WHEN IT STARTED OPERATIONS IN FEBRUARY, IT WAS ANNOUNCED THAT PROTOTYPES WOULD REPLACE SHATABDIS ACROSS THE COUNTRY....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X