பொது செய்தி

இந்தியா

வீரர்களுக்கு உத்வேகம் அளித்த பிரதமரின் பயணம்: முன்னாள் ராணுவ நிபுணர் பெருமிதம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
பிரதமர் மோடி, சீனா, இந்தியா, லடாக், ராணுவம், உத்வேகம், கமல் தவார்,


புதுடில்லி : பிரதமர் மோடி லடாக் சென்றது ராணுவ வீரர்களை உத்வேகப்படுத்தும் என பாதுகாப்புத்துறை நிபுணரும், ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலுமான கமல் தவார் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், 15ம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். சீன தரப்பில், 43க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனால், சீனா இதை மறுத்து வருகிறது. இதையடுத்து, நம் ராணுவம், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன், முப்படை களின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உடன் சென்றனர்.தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு, பிரதமர் மோடி சென்றார். தொடர்ந்து, நிமு பகுதி யில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள், இந்தோ - திபெத் படை வீரர்கள் ஆகியோருடன், மோடி ஆலோசனை நடத்தினார்.


latest tamil newsதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரு நாடு, தன் எல்லையை விரிவுபடுத்தும் காலம் முடிந்துவிட்டது. எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள், அவற்றின் படைகள் தோல்வி அடைந்ததையும், திரும்பிச் சென்றதையும் தான், வரலாறு உணர்த்துகிறது. அதனால், எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும், என, சீனாவுக்கு, அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக பாதுகாப்பு நிபுணரும், பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் முதல் தலைவருமான கமல் தவார் கூறியதாவது : பிரதமரின் லடாக் பயணம், வீரர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்தியதுடன், அங்கு பணியில் இருந்த அதிகாரிகளுடன் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். ஆனால், பிரதமரின் பயணத்தின் மூலம் சீனாவிற்கு நேரடியாக ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கும் செய்தி சென்றுள்ளது. இது தான் முக்கியமானது. சீனா எல்லை விரிவாக்கத்தில் ஆர்வம் கொண்டது. ஆனால், தற்போது இருப்பது வளர்ச்சிக்கான யுகம். எல்லை வரிவாக்கத்திற்கான காலமில்லை என பிரதமர் தெளிவாக தெரிவித்துவிட்டார். சீனாவின் பெயரை குறிப்பிடாமல், மற்ற நாடுகள் எதிர்த்தால், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். மோடி மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து பிரதமர்களும் சீனாவுடன் அமைதியை ஏற்படுத்தவே முயன்றனர். ஆனால், சீனா, எப்போதெல்லாம் இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்டாலும், அந்நாட்டிற்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த முறையும் சீனா மீண்டும் மோதலில் ஈடுபட்டால், அந்நாட்டிற்கு சரியான பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsபிரதமரின் லடாக் பயணம் குறித்து சீனா, எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில், சீனாவும், இந்தியாவும் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில், எந்த ஒரு தரப்பும், பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்தது.

இது தொடர்பாக கமல் தவார் மேலும் கூறுகையில், சீனாவின் இந்த கருத்து முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது. லே, சென்ற மோடி எந்த இடத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை. லே பயணத்தின் மூலம் தூதரக வழிகளை திறந்து வைத்துள்ள பிரதமர், ராணுவத்தின் மனபலத்தை கூட்ட, நாட்டின் எந்த பகுதிக்கும், எந்த நேரத்திலும் செல்வேன் என்ற செய்தியை அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஜூலை-202016:57:35 IST Report Abuse
Malick Raja சீனன் ஆட்டைய போட்ட விவரம் மறைப்பதற்கு இதுபோன்ற கபட நாடகங்கள் . . பொய் நிலைப்பதும் இல்லை நின்றதும் இல்லை ..
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
05-ஜூலை-202005:26:38 IST Report Abuse
B.s. Pillai China tries to threaten other neighbours with its muscle power, by heaping arms and battalions of men along the border. But our Hon.P.M. had counter acted Chinese muscle power of hundreds of army personnel by his one man visit to the border. This vsit haas psycologically boosted our Armed forces to Himalayan heights and at the same time, gave dysentery to the Chinese power. One Arrow and multiple birds. It is the usual trick of the Chinese to threaten the neighbour countries by its mass of Army strength, but a small country like Vietnam had taught lessons which they can never forget in life. So it is our turn for replying them in no mild tone than what is already taught by our Vietnam friends. We are not aggressive but can we tolerate others to occupy even one inch of our Mother Land ? It is not congress Regime to keep quiet or sign MOU with China.It is Mr.Modi Government, with total new blood in its veins. This is the golden opportunity for India to fight to get back POK and whatever lost earlier with China. Let us not stop now, htem who rolled out the ball first. Jai hind. Vante Matram. Jai Jawan jai kissan.Bharat Matha ki jai.
Rate this:
Cancel
04-ஜூலை-202020:11:06 IST Report Abuse
Jayamurthy chandra mohan harty salute our PM
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X