பொது செய்தி

இந்தியா

டுவிட்டரில் வைரலாகும் பேயின் விரல்கள் புகைப்படங்கள்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: பேய் படங்களில் வருவதுபோல ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டோனா பூரி என்ற 22 வயது பெண்மணி மூன்று மாதங்கள் வெளியே தங்கிவிட்டு மீண்டும் தன் பிளாட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது சமையலறையில் அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.கிச்சன் ஷெல்ப் பக்கத்தில் பேயின் நீண்ட கை விரல்கள் போல ஏதோ ஒரு வேர் முளைத்திருந்தது. அதனைக்கண்டு அதிர்ந்து
Potato Roots, Invade, Scary, Picture, viral, social media, உருளைக்கிழங்கு, வேர், பேய் விரல்கள், டுவிட்டர்

புதுடில்லி: பேய் படங்களில் வருவதுபோல ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டோனா பூரி என்ற 22 வயது பெண்மணி மூன்று மாதங்கள் வெளியே தங்கிவிட்டு மீண்டும் தன் பிளாட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது சமையலறையில் அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.

கிச்சன் ஷெல்ப் பக்கத்தில் பேயின் நீண்ட கை விரல்கள் போல ஏதோ ஒரு வேர் முளைத்திருந்தது. அதனைக்கண்டு அதிர்ந்து போன டோனா, பின்னர் அதனை உற்று நோக்கியபோது அது உருளைக்கிழங்கு வேர் எனத் தெரியவந்தது. சுவற்றுக்கு அருகே உருளைக்கிழங்கு விதை விழுந்து அது சுவற்றை பெயர்த்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துள்ளது.


latest tamil news


மூன்று மாதங்களில் நன்றாக மழை பெய்து இருப்பதால் அது நீளமாக வளர்ந்துள்ளது தெரியவந்தது. இந்தப் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பொதுவாக பராமரிப்பு இல்லாத பல நாட்கள் பூட்டப்பட்டு இருக்கும் வீடுகளில் இதுபோல தப்புச் செடிகள் முளைக்கும். ஆனால் பிங்க் நிறத்தில் முளைத்த உருளைக்கிழங்கு வேர் பார்ப்பதற்கு பேய் படங்களில் வரும் காட்சி போல பீதியைக் கிளம்புவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் வெளியான சில வினாடிகளிலேயே அதிக பார்வையாளர்களையும் லைக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. டுவிட்டர் வலைதளத்தில் 60,000 பேர் இந்த டுவீட்டை ரீட்வீட் செய்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் பயத்தினை ஏற்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு நிமிடத்தில் டோனாவுக்கு பீதியை கிளப்பிய இந்த வேர் பின்னர் சிரிப்பை வரவழைத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஜூலை-202019:16:52 IST Report Abuse
ஸாயிப்ரியா முதலில் பயந்தாலும் அச்சம் தவிர்த்து சிந்தித்து செயல் பட்டுள்ளார். Good.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202001:32:24 IST Report Abuse
தல புராணம்ஆனா இன்னமும் கிரகணத்தை காட்டி பயமுறுத்தும் பேயோட்டிகள் இன்னமும் இருக்காங்க.....
Rate this:
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
04-ஜூலை-202018:42:51 IST Report Abuse
Prof. A.Venkateswaran. பேயின் கையில் இத்தனை விரல்களா?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜூலை-202017:55:29 IST Report Abuse
S. Narayanan பேய பாக்கணும் நானும் ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன். இன்று வரை பார்க்க முடியவில்லை.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
05-ஜூலை-202001:31:41 IST Report Abuse
தல புராணம்கல்யாணம் ஆகல்லியோ ? இல்லைனா பரவாயில்லை, உங்க வீடு கண்ணாடியில் பாருங்களேன்....
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-202002:46:38 IST Report Abuse
naadodiGo and see the mirror...
Rate this:
05-ஜூலை-202009:10:59 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுDid you never visited Arivalayam?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X