பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இதுவரை 1.07 லட்சம் பேருக்கு கொரோனா; 1450 பேர் பலி

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 04, 2020
Share
Advertisement
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

இந்த செய்தியை கேட்க

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 04) புதிதாக 4,280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆகவும், பலி எண்ணிக்கை 1,450 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,180 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 100 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 94 ஆய்வகங்கள் (அரசு-49 மற்றும் தனியார் 45) மூலமாக, இன்று மட்டும் 36,164 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 06 ஆயிரத்து 884 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil news


இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,588பேர் ஆண்கள், 1,692 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 65,604 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 41,375ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 2,214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 592 ஆக உள்ளது.


வயது வாரியாக பாதிப்பு



இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். அதில், 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 47 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,450 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 44,956 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,277 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 88 ஆயிரத்து 847 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 ஆயிரத்து 877பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X