சீனாவில் அடுத்த வாரம் விசாரணையை தொடங்குகிறது உலக சுகாதார நிறுவனம்

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
WHO, Investigate, China, Coronavirus, Origins, உலக சுகாதார நிறுவனம், உலக சுகாதார அமைப்பு, விசாரணை, சீனா, கொரோனா, வைரஸ்

இந்த செய்தியை கேட்க

ஜெனீவா: கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து ஆறு மாதம் கடந்துள்ள நிலையில், அதன் குழுவினர் அடுத்த வாரம் சீனா சென்று, கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் மனிதர்களுக்கு பரவிய விதம் குறித்து ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸால் இன்று உலகளவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் தொற்றால் அவதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 29 அன்று உலக சுகாதார இயக்குனர் அளித்த பேட்டியில், சீன அதிபர் உடனான ஒப்பந்தத்தின் படி, சர்வதேச வல்லுநர்கள் குழுவை விரைவில் சீனாவுக்கு அனுப்பி நோய் எவ்வாறு கிளம்பியது என்பதை கண்டறிய உள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த வாரம் தான் அக்குழு சீனா சென்று முழுமையான விசாரணை நடத்த உள்ளது.


latest tamil newsஇது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு உலக சுகதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் விலங்கிலிருந்து மனிதனுக்கு எங்கு, எப்படி தொற்றியது என்பதை கண்டறிய ஒரு நல்ல விசாரணை தேவை. அது நேரடியாக வவ்வாலிடம் இருந்து மனிதனுக்கு பரவியதா அல்லது இடையில் வேறு ஏதேனும் விலங்கு இருந்ததா என்று ஆராய உள்ளோம். நிபா போன்ற பிற வைரஸ் நோய்களில் வவ்வால்களின் பங்கு இருந்தது.


latest tamil newsகோவிட்-19-ஐ ஏற்படுத்தும் வைரஸிலும் வவ்வால் வைரஸின் தடயம் உள்ளது. டிசம்பர் 31 அன்று வூஹானில் வழக்கமான நிமோனியா நோய்கள் கிளம்பியதாக சீன அரசு எங்களுக்கு அறிக்கை அளித்தது. தென் கிழக்கு ஆசியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்கள் உள்ளன. தெற்கு சீனாவிலும், தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளிலும் வாழும் மக்கள் கொரோனா வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளை பெற்றுள்ளனர். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sami Sam - chidambaram ,இந்தியா
05-ஜூலை-202015:53:15 IST Report Abuse
Sami Sam விசாரணை என்ற பெயரில் பூசி மொழுகாமல் சரியான நடவடிக்கை வேண்டும்
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
04-ஜூலை-202023:46:03 IST Report Abuse
SaiBaba விசாரிக்கலைங்கிற பேர் வரக்கூடாதில்லையா, அதுக்காக
Rate this:
Cancel
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
04-ஜூலை-202023:40:56 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Enna dashku indha visaranai ? China karan sollitaan indha corona human to human spread aagadhu nu sonnadhu thaaney indha WHO ? china karan kodutha ellamey 420 info nu theriyala. Isha ivanga check panni kooda parkala. Mask thevailla perusa bayapada onnum illanu (china sonnadha) appadiye world countries ku sonna indha WHO kooda oru vidhathula kutravaali thaan. WHO nu vechikittu CHO (china health organization ) maadhiri nadathukitta bodhu enga pochaam indha arivu ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X