பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் மீண்டும் அமலுக்கு வந்தது 'பாடி ஓன் கேமரா': இனி யாரும் தப்ப முடியாது!

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

கோவை: வீண் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து போலீசாருக்கான 'பாடி ஓன் கேமரா திட்டம்' மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.



latest tamil news



வாகன தணிக்கையின் போது, போக்குவரத்துக் போலீசார் வரம்பு மீறுவதாகவும், பிரச்னையில் ஈடுபடுவதாகவும், அதேபோல வாகன ஓட்டிகள் போலீசாருடன் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், பணியில் உள்ள போக்குவரத்து போலீஸ் மற்றும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும் வகையில், 'பாடி ஓன் கேமிரா' திட்டம் அமல்படுத்தப்பட்டது.

போலீசாரின் சட்டையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் இருதரப்பையும் கண்காணிக்க முடியும். போலீசார், வாகன ஓட்டிகள் இடையிலான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்க முடியும். பல்வேறு காரணங்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்ற மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது இந்நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறுகையில், ''இதன் மூலமாக போலீசார், வாகன ஓட்டிகள் இடையே பிரச்னை எழும் போது யார் மீது தவறு உள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். மேலும், இருதரப்பினரும் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வதால், எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கோவை போக்குவரத்து போலீசாருக்கு, 69 பாடி ஓன் கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் அவற்றை அணிந்து பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
08-ஜூலை-202016:57:17 IST Report Abuse
ocean சாத்தான் குள காவல் நிலையத்திலும பாடி ஓன் கேமரா பொருத்தியிருக்கலாம்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
07-ஜூலை-202017:42:10 IST Report Abuse
S.P. Barucha ஒவ்வொரு தகுதி இல்லாத , நேர்மை இல்லாத காவல் துறை அதிகாரிகளின் இட மாற்றமும் அரசியல்வாதிகளின் பின்புலம் இருக்கிறது. தகுதி, திறமை,பண்பாடு, நேர்மை , மனிதநேயம் இல்லாதவர்களை காவல் துறைக்கு தேர்வே செய்யக்கூடாது. இந்த வகையில் தான் குற்றவாளிகள் சீருடையில் இருக்கிறார்கள் .
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
05-ஜூலை-202011:04:00 IST Report Abuse
blocked user களவாணித்தனத்தின் அளவு குறையும்... நிற்கும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இதை எப்படி வேலை செய்யாமல் வைக்கலாம் என்று யோசிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X